அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள உயர்தரப் பள்ளி ஒன்றின் கேன்டீனில் மாணவன் ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மாணவி பலியானதுடன் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலையும் செய்து கொண்டுள்ளான்.
இம்மாணவன் சுட்டதில் காயம் அடைந்தவர்களில் இருவர் அவனின் உறவினர்கள் ஆவர். எக்காரணத்துக்காக ஜெய்லின்ம் பிரைபெர்க் என்ற இம்மாணவன் இவ்வாறு நடந்து கொண்டான் என இன்னமும் தெரியவில்லை. தற்போது உள்ளூர் போலிசாருடன் அமெரிக்க புலனாய்வுத் துறையான FBI ஐயும் இணைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதுடன் இறந்த மாணவியின் குடும்பத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாம தனது இரங்கலையும் பகிர்ந்துள்ளார்.
கால்பந்து அணியில் ஏற்பட்ட மோதல் அல்லது ஏதேனும் டேட்டிங் விவகாரமா எனப் பல கோணங்களில் போலிசார் விசாரித்து வருகின்றனர். ஜெய்லின் பிரைபெர்க் பயன்படுத்தியது அவனின் தந்தையின் அதிநவீன வேட்டையாடும் துப்பாக்கி எனவும் தனது டுவிட்டரில் இத்துப்பாக்கியுடனும் வேட்டையாடிய மானுடனும் இவன் புகைப் படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளான் எனவும் கூறப்படுகின்றது. இவன் சுட்டதில் காயம் அடைந்த மாணவர்களில் மூவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் முதற் கொண்டு அமெரிக்காவில் பள்ளிகளில் நிகழ்த்தப் பட்ட 87 ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க வாஷிங்டன் மாநிலப் பள்ளியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: மாணவி பலி: 4 பேர் படுகாயம்