Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நம்பிக்கையோடு இருங்கள்; நான் அழிவை நோக்கி யாரையும் அழைக்கவில்லை. சுபீட்சமான வாழ்வு நோக்கியும், ஒளிமயமான எதிர்காலத்திற்காகவுமே உங்களை அழைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் யாழ் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வேலைவாய்ப்புக் கோரி வருகை தந்த இளைஞர், யுவதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டு பணிபுரியச் செல்லும் அலுவலகங்களில் கண்ணியமாகவும், அக்கறையோடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றவர்களாக நீங்கள் செயற்பட வேண்டும்.

வேலைவாய்ப்பை உங்களுக்கு பெற்றுத் தருவதற்கு நானும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி முயற்சிகளையும் எடுத்து வருகின்றேன். நீங்கள் தொடர்ந்தும் எம்மோடு இணைந்து செயற்படுகின்ற போதுதான் நானும் உற்சாகத்தோடு முயற்சி செய்து உங்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தரமுடியும்.

இதேவேளை, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காக எவருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு நான் ஒருபோதும் அனுமதியளித்ததில்லை. அது எமது கட்சியின் கொள்கையல்ல. நம்பிக்கையோடு இருங்கள் உங்களுக்கான வேலைவாய்ப்புகள் விரைவில் பெற்றுத்தரப்படும். அத்துடன், நீங்கள் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் எமது மக்களுக்கு பணியாற்றுவதையே நான் விரும்புகின்றேன்” என்றுள்ளார்.

0 Responses to நம்பிக்கையோடு இருங்கள்; நான் அழிவை நோக்கி யாரையும் அழைக்கவில்லை: டக்ளஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com