Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சிக்கு நேற்று வந்த மகிந்தர்  கொச்சை தமிழில் உரையாற்றினார். வழமையாகவே தமிழ் பகுதிக்கு வரும் போது அவர் இவ்வாறு அரைகுறை தமிழில் உரையாற்றுவது மகிந்தரின்  வழக்கம்.

அதே பாணியில்   இன்றும் 'தன்னுடைய தமிழில்' உரையாற்றிய போது பல்வேறு அர்த்தப்பிழைகளோடு சொற்கள் வெளிப்பட்டன.

இதனைக்கேட்டு அரச  அதிகாரிகளும் பொதுமக்களும் 'கொல்'லென்று விழுந்து விழுந்து சிரித்தனர். இதனால் மகிந்தரின்  நிலை தர்ம சங்கடமாகிப்போனது.

உடனே மகிந்தவின்  மானம் காக்க புறப்பட்டார் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ்.  அவர் சரியான சொற்களை மந்திரம் ஓதுவதுபோல மகிந்தரின்  காதில் குசுகுசுக்க அதை அப்படியே ஒப்புவித்தார் மகிந்தர். பின்னர் "நான் இன்னமும் தமிழில் பாலர் வகுப்புத்தான். விரைவில் நன்றாக தமிழில் தேர்ச்சி பெற்று விட்டு உங்கள் முன் விளாசித்தள்ள போகிறேன் பாருங்கள்" என்று சவாலாகக்கூறி கூறி உரையை நிறைவுசெய்தார் மகிந்தர்.

0 Responses to மகிந்தவின் மானம் காக்க மகிந்தவுக்கு தமிழ் படிப்பித்த அமைசர் டக்ளஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com