Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தொடுத்துள்ள ஜாமீன் மனு, இன்றைய மனுக்களில் 72 வது மனுவாக விசாரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வேண்டிய மனுக்களில் 72வது மனுவாகத் தாக்கலாகி இருப்பதால், அத்தனை மனுக்களையும் விசாரித்த பின்னர் ஜெயலலிதா மனுவை விசாரிக்க வேண்டும் என்றால் ஒருநாள் தள்ளி நாளை கூட விசாரிக்க நேரிடலாம் என்று இன்று காலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் ஜெயலலிதா ஜாமீன் மனுவை சற்று முன்னதாக விசாரிக்க அதிமுக வழக்கறிஞர்கள் ராம்ஜெத் மலானி உள்ளிட்ட மூன்று பேர் நீதிபதியை அவரது அறையில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளனர்.

நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ளதால், அவர் இந்த மனுவை எத்தனையாவது மனுவாக எடுத்து விசாரிக்கவுள்ளார் என்கிறத் தகவல் அவர் தமது இருக்கையில் வந்து அமர்ந்த உடன்தான் தெரியும் என்றும் தெரியவருகிறது. இதற்கிடையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு, பத்திரிகையாளர் அடையாள அட்டை, வழக்கறிஞர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனு இன்றைய மனுக்களில் எழுபத்து இரண்டாவது மனு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com