வீட்டிலும் வெளியிலும் மனைவிக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவன் தம்மை தினமும் அடித்துத் துன்புறுத்துவதாக ஒரு வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், வீட்டிலும், வெளியிலும் மனைவிக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது என்பது ஒரு கணவனின் கடமை. ஆனால், இவர் வீட்டில் மனைவிக்குப் பாதுகாப்புக் கொடுக்கக் கூட முடியாமல் அவரை தினம் அடித்துத் துன்புறுத்தி உள்ளார். எனவே, இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிடுகிறோம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோன்ற ஒரு வழக்கில்,பெண்கள் வீடுகளை விட வெளியில் பாதுகாப்பாக உள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வீட்டிலும் வெளியிலும் மனைவிக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது கணவனின் கடமை: டெல்லி நீதிமன்றம்