Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அடுத்த மாதமளவில் புதுடில்லியில் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகளில் இந்திய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்' வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள தமது அமைப்பின் நிகழ்வொன்றில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த அழைப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா வந்தால், பிரதமருடன் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்வது குறித்தே இந்திய அதிகாரிகள் முனைப்புப் காட்டி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி இந்திய பிரதமர் மூன்று நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக நேரமொன்றை ஒதுக்கீடு செய்யவே தாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சர்- இந்தியப் பிரதமருக்கிடையில் அடுத்த மாதம் சந்திப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com