Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெயலலிதாவை சிறையில் அறைமாற்றம் செய்துள்ளோம் என்று வெளியான தகவல் வெறும் வதந்தி என்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறைவளாக டிஐஜி தெரிவித்துள்ளார்.

கர்நாடக ஊடகங்களில் ஜெயலலிதாக் குறித்து பல்வேறு வதந்திகள் அவ்வப்போது வெளியானவண்ணம் உள்ளன. இதற்கு தினம் ஒரு பதிலாக வெளியிடுவது என்பதும் பார்ப்பன அக்ரஹார சிறை வளாக டிஐஜியின் அன்றாட வேலைகளில் ஒன்றாகி உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவை சிறையில் முதல்மாடிக்கு அறை மாற்றி உள்ளனர் என்றும், இது ஜெயலலிதாவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்றும் கர்நாடக ஊடகங்களில் தகவöல் வெளியானது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த டிஐஜி, ஜெயலலிதாவை சிறையில் அறைமாற்றம் செய்துள்ளோம் என்று வெளியானத் தகவல் வெறும் வதந்திதான் என்று கூறியுள்ளார்.

முதலில் ஒதுக்கிய அறையிலேயே ஜெயலலிதா உள்ளார் என்றும், முதல் இரண்டொரு நாட்கள் யாரையும் பார்க்க விரும்பாத ஜெயலலிதா நேற்று முழுவதும் சசிகலா, இளவரசியுடன் சேர்ந்து இருந்தார் என்றும் டிஐஜி கூறியுள்ளார். மேலும், அவருக்கு இரண்டு தனி சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும், அவர்கள் அன்றாடம் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக அமைதியுடன் காணப்படும் ஜெயலலதா ஆங்கில நாளிதழ்கள், புத்தகங்கள் படிப்பதில் பெரும் ஆர்வம் காண்பித்து வருகிறார் என்றும் டிஐஜி தெரிவிக்கும் தகவலாக உள்ளது.

0 Responses to ஜெயலலிதா சிறையில் அறைமாற்றம் செய்யப்பட்டார் என்று வெளியான செய்திகள் தவறானவை: டிஐஜி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com