இந்திய-இலங்கை கடல் எல்லையில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லேட், பிரசாத் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இலங்கை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 5 மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

0 Responses to இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர் பன்னீர்செல்வம்