Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சாலைமறியல், ரயில் மறியல், அரசுப்பேருந்துக்கு தீவைப்பு, ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு என ராமேஸ்வரம் முழுவதும் கலவர பூமியாக மாறிபோயுள்ளது.

 போதை பொருள் கடத்திய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அ.தி.முக., , தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு கடும் தெரிவித் துள்ளன.

2011- ல் இந்தியாவில் இருந்து கொழும்புவுக்கு போதை பொருள் கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர் மீதும், இலங்கையை சேர்ந்த 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 8 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மீனவர்கள் 8 பேருக்கும் கொழும்பு கோர்ட் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித் துள்ளது. இந்த தீர்ப்புக்கு இலங்கை மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய நவம்பர் 14ம் வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

 தண்டனை விவரம் அறிந்த ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொதிப்படைந்தனர். மதுரை- ராமேஸ்வரம் சாலையில் மீனவர்கள் சாலை மறியலி ஈடுபட்டனர். மேலும் இங்கு இருந்த கயிறுகளுக்கு தீ வைத்தனர். தங்கச்சிமடத்தில் ரயில் தண்டவாளம் 300 மீட்டர் அளவுக்கு தகர்க்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்களும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிக்கிறது.

 ராமேஸ்வரம் ரோட்டில் சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் திரண்டுள்ளனர். ஏறக்குறைய 5 மி.மீட்டர் தூரத்திற்கு மீனவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வருகின்றனர். பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது . 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. ரயில் தண்டவாளத்தில் தீ வைக்கப்பட்டதால் ராமேஸ்வரம்- சென்னை ரயில்கள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. பதட்டம் நீடிக்கிறது.

0 Responses to தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை தீர்ப்பால் ஆவேசம்: ராமேஸ்வரத்தில் கலவரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com