ஜெயலலிதாவை கர்நாடக சிறையில்தான் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை என்று புதிய மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பும் பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருக்கும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்டவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று வழங்கப்பட்டு இருந்ததால், நால்வரும் உடனடியாக கைது செய்யப்பட்டு பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பல மூத்த அரசியல்வாதிகள் கருத்துத்
தெரிவித்து இருந்தனர். ஆனால் ஜெயலலிதாவை சிறை மாற்றம் செய்யும் அதிகாரம் தமது அரசுக்கு இல்லை என்று சித்தாராமையா பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் அதிமுக சார்பாக ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலாகி உள்ளது. அந்த மனுவில் உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தால் கர்நாடக சிறையில்தான் அடைக்க வேண்டும் என்று எந்தவித வழிக்காட்டுதல்களும் கூறவில்லை. எனவே, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது. இந்த மனு எப்போது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறத் தகவல் இதுவரை தெரியவில்லை.

0 Responses to ஜெயலலிதாவை கர்நாடக சிறையில்தான் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை: புதிய மனு