Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஜினிகாந்தை நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன்.

பாஜகவில் ரஜினிகாந்தை இணைய அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது.   ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துவிட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், நவராத்திரி விழாவை ஒட்டி, ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்க அவரை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், மோடி குறித்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறியதாகத் தெரிகிறது. இருப்பினும் அவர் ரஜினிகாந்தை பஜகவில் இணைக்கவே அவரை சந்தித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவைப் பலப்படுத்த ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டியது அவசியம் என்று, கட்சியின் மூத்தத் தலைவர்கள் மட்டுமல்லாது, தமிழிசை சவுந்திரராஜனின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, தமிழிசை சவுந்திரராஜன் லிங்கா படப்பிடிப்பு முடியட்டும் என்றும், பின்னர் முறைப்படியான அழைப்பை ரஜினிகாந்துக்கு விடுக்கலாம் என்று கருதியுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1980 முதல் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அத்வானியின் சிறந்த மற்றும் நெருங்கிய நண்பர் ரஜினிகாந்த் என்பதும், மோடி பிரதமராவதற்கு முன்னர் ரஜினியின் இல்லத்துக்கு சென்று வந்தார் என்பதும், மோடி தமது பதவி ஏற்பு விழாவிற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார் என்பதும் இவ்வேளையில் குறிப்பிடத் தக்கவை.

0 Responses to ரஜினியை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன்: பா.ஜ.க.வில் இணைய அழைப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com