யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ், யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முன்னதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அவரது அலுவலகத்தில் வைத்து பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் சந்தித்திருந்தார்.
இன்று புதன்கிழமை யாழ்.ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் இராணுவ தலையீடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி மஹிந்தவின் யாழ் விஜயம் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் குறித்தும் ஆயரால் பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
லோரா டேவிட்ஸ், பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகராக பதவியேற்றபின் மேற்கொண்ட முதலாவது யாழ் விஜயம் இதுவாகும்.
இதனிடையே முதல்வருடான சந்திப்பில் ஜனாதிபதி வடமாகாணசபை தொடர்பாக தனது வடக்கு விஜயத்தின் போது முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமது தரப்பு பதில்களை முதலமைச்சர் தெளிவுபடுத்தியதாகத் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிட்ஸ் இன்று மதியம் மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்துக்கு சென்று பார்வையிட்டதுடன் மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
நலன்புரி நிலையத்தில் உள்ள மக்கள் பிரிட்டன் பிரதித் தூதுவரிடம் 24வருடங்களாக தாம் இங்கேயே வசித்து வருகின்றோம்.பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் முகம் கொடுத்து வருவதுடன் மழைக்காலங்களிலும் தாம் தூங்கக் கூட முடியாது உள்ளது என்றும் அவர்கள் பிரதித் தூவரிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பிரிட்டன் தூதுவர் டேவிட் கமரூன் இங்கு வருகை தந்து தமது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். தாம் இங்கு பல பிரச்சினைகளை முகம் கொடுத்து வருகின்றோம்.எனவே இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வை உடனே பெற்றுத் தருமாறும் மக்கள் தூதுவரிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் பிரட்டன் தூதரக அதிகாரிகளுடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வலி. வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோரும் முகாமுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ்ப்பாணத்தில் பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!