மஹிந்தவின் பெயர்பலகையை தூக்கி வீசினார் அமைச்சர் ஐங்கரநேசன். தொண்டமானாறு வளுக்கை ஆறு நன்னீர் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக அங்கு மகிந்த ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் புகைப்படங்களை தாங்கிய பெயர்ப்பலகை நிறுவப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் அங்கு சென்ற விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் நன்னீர் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்க ஏதுவாக அங்கிருந்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது புகைப்படங்கள் உள்ளடக்கிய பதாகையை அகற்றியுள்ளாதாக ஈபிடிபி குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும் அப்பகுதிக்கு படையினர் சகிதம் வருகை தந்த ஈபிடிபியினர் அங்கு நின்றிருந்த பொதுமக்களிற்கு விடுத்த அச்சுறுத்தலையடுத்து அந்த பதாகையை அவ்விடத்திலேயே மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முழத்திற்கொன்றாக மலசலகூடம் முதல் கால்வாய் வரை வடக்கின் மும்மூர்த்திகளான இவர்களது பெயர்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தூக்கிவீசினார் ஜங்கரநேசன்! சண்டைக்கு வந்தனர் படையினர்!!