Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் பிரதமர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கான நகல் வரைபை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தூய்மையான நாளைக்கான தேசிய சபை என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழிமை நடைபெற்றது.

தூய்மையான நாளைக்கான தேசிய சபை அமைப்பின் யோசனையை ஏற்றுக்கொள்ளாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் அவரை தோல்வியடைய செய்வதற்கான சகலவற்றையும் தான் செய்வேன் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் தனது உரையின் போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

19வது திருத்தத்துக்கான நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சில:

1. ஜனாதிபதி அரச தலைவராக இருப்பார் என்பதுடன் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராக இருக்கவேண்டும்.

2. ஜனாதிபதி இன்னும் அரசியல் கட்சியின் தலைவராக இல்லாமல் நாட்டின் ஐக்கியம் அல்லது ஒருமைப்பாட்டுக்கு அல்லது அழிவுக்கான நிலைமையொன்று ஏற்பட்டால் நாட்டை பாதுகாப்பதற்கான பொறுப்பு மற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படல் வேண்டும்.

3. அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 20-25க்குள் மட்டுப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 35க்கும் அதிகமாக இருகக்கூடாது.

4. அமைச்சுகளுக்கான நிறைவேற்று குழு முறைமையை ஏற்படுத்தல் வேண்டும்.

5. பாராளுமன்ற தேர்தல் முறைமையில் விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதற்காக தேர்தல் முறைமை மாற்றப்படல் வேண்டும்.

6. அரசியலமைப்புக்குள் சுயாதீன ஆணைக்குழுக்கள் சட்டமாக்கப்படல் வேண்டும். அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களாக பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர் மற்றும் பாராளுமன்றத்தில் இரகசிய வாக்குகளினால் ஐவர் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

7. இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தை நாட்டுக்குள் அமுல்படுத்தல்.

0 Responses to நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி பாராளுமன்றத்தினை வலுவுள்ளதாக்க வேண்டும்: அத்துரலிய ரத்ன தேரர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com