மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எண்களை வைத்துக் கொண்டு ஏமாற்றும் திட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யோசனைகளை முன்மொழிந்தாலும், அது மக்களுக்கு கிடைக்காது. இதன் மூலமாக மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாவது மட்டுமே மிச்சமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தினை பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்த பின்னர் எதிர்க்கட்சியினரைப் பார்த்து, “இந்த பாங்கறியாதவனின் திட்டம் எப்படி?” என்று ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to எண்களினால் ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம்: சஜித் பிரேமதாஸ