பிரதமர் நரேந்திர மோடியைத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நரேந்திர மோடி, ஹரியானா, மராட்டிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த நிலையில், உடனடியாக அவரது சொந்தத் தொகுதியான வாரணாசி செல்வதாக இருந்தது. ஆனால், அவரது உடல்நிலை சரியில்லை என்று மோடியின் வாரணாசி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஆனால், அதே நாளில் நேற்று ஆந்திர மாநிலத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட
பகுதிகளை மிக சுறுசுறுப்புடன் மோடி பார்வையிட்டார்.இந்நிலையில்தான் வாரணாசியில் மோடியை தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் தாக்க சதித்திட்டம் தீட்டியிருந்தனர் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மோடி வாரணாசி சென்றால் அங்கு கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடும் என்பதால்,இதை சாக்காக வைத்து தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டி இருந்தனர் என்கிறத் தகவல் உளவுத் துறைக்கு கிடைத்திருந்தது என்றும், அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே கடைசி நேரத்தில் மோடியின் வாரணாசி பயணம் ரத்தானது என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கட்டுக்கடங்காத கூட்டத்தில் மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகவும் சிரமம் என்று காவல்துறை தரப்பும் மோடியின் பயண ரத்துக்குப் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

0 Responses to மோடிக்கு கொலை அச்சுறுத்தல்?