Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாத்தளை மாவட்டத்தின் அல்வத்தைப் பகுதியில் துப்பாக்கி சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருப்பதாக பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதாக இறத்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் திலக்குமார சிறி தெரிவித்துள்ளார்.

அல்வத்தைப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற 50 ஏக்கர் காணிப் பகுதியிலேயே மேற்படி ஆயுதம் தாங்கியோரின் நடமாட்டம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறத்தோட்டை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை அதன் தலைவர் ஜயந்த புஸ்பகுமார தலைமையில் நடைபெற்ற போதே உறுப்பினர் குமாரசிறி மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த சில தினங்களாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்வத்தைப் பகுதியில் சீருடை தரித்த பிக்குமார் சிலர் துப்பாக்கிகளை ஏந்திய வண்ணம் நடமாடித் திரிகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பீதிக் குள்ளாகியுள்ளனர்.

உயர் ரக வாகனங்களில் வந்திறங்கும் குறித்த பிக்குகுள் இங்கு கைவிடப்பட்ட நிலையிலுள்ள சுமார் 50 ஏக்கர் காணிப் பகுதியிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது பற்றி பொலிஸாரிடம் நான் முறைப்பாடு செய்திருந்தேன். இதனால் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து கொலை பயமுறுத்தல் செய்யப்பட்டு எனது பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ் பெற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.

குறிப்பிட்ட காணிப் பகுதியின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இக்காணிப் பகுதியில் விஜயபால மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட குகையுடன் கூடிய சுரங்கப்பாதையொன்று இருப்பதாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் உண்டு. இங்கு ஏதேனும் புதையல் இருக்கலாம் என்றும் அதை தோண்டி எடுப்பதற்கே இந்த ஆயுததாரிகள் முயன்று வருவதாக மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியாயினும் பிக்குகளின் உடை தரித்துக்கொண்டு பயங்கர துப்பாக்கிகளை பகிரங்கமாகவே ஏந்தித் திரிவதும் அதன் காரணமாக மக்கள் மத்தியில் திகிலை உருவாக்குவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, பிரதேச சபை இவ்விடயத்தில் தலையிட்டு மக்கள் மத்தியில் அமைதிச் சூழலை ஏற்படுத்த முன்வரவேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to மாத்தளையில் துப்பாக்கிகளுடன் பௌத்த பிக்குகளின் நடமாட்டம்; பிரதேச மக்கள் அச்சம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com