Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவின் கொபானே நகருக்கு அண்மையில் ISIS இன் கடுமையான முற்றுகைப் போரை எதிர்கொண்டு வரும் குர்து படைகளுக்குத் துணையாக செவ்வாய் முதல் தொடர்ந்து இரு நாட்களுக்கு அமெரிக்க யுத்த விமானங்கள் 18 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளன என மத்திய கட்டளைத் துறை தெரிவித்துள்ளது.

இந்த சமீபத்திய தாக்குதல்களில் பல IS இலக்குகளுடன் அவர்கள் மறைந்து இருந்த 16 கட்டடங்களும் அழிக்கப் பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நிகழ்த்தப் பட்ட இத்தாக்குதல்களில் அமெரிக்காவின் யுத்த ஜெட்டுக்களுடன் போர் விமானமும் ஈடுபட்டன. இதில் ஹடித்தா அணைக்கு அருகே IS இன் ஆயுதம் கொண்டு சென்ற வாகனமும் அழிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே கொபானேயின் வடபகுதி ISIS வசம் வீழ்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஈராக்கில் ISIS போராளிகள் தற்போது அன்பர் மாகாணத்திலுள்ள நகரங்களையும் முற்றுகையிட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வடமேற்கு ஹீத் நகரிலுள்ள மிகப் பெரிய முகாமாக ஆசாத் முகாம் விளங்குகின்ற போதும் அங்கிருந்து ISIS இன் தாக்குதலை எதிர் கொண்ட ஈராக் இராணுவம் அதனைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பின்வாங்கி சென்று விட்டதால் ஹீத் நகரின் மையப் பகுதியை ISIS ஆக்கிரமித்து அதனைத் தன் வசப் படுத்தியுள்ளது.

மறுபுறம் இஸ்லாமிய தேச போராளிகளுடன் தொடர்புடைய இரு பெண்கள் மற்றும் ஓர் மாணவர் உட்பட 14 முஸ்லிம்களைத் தான் கைது செய்திருப்பதாக மலேசிய போலிஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏப்பிரல் முதற் கொண்டு ISIS உடன் தொடர்புடையவர்கள் என மலேசிய அரசு கைது செய்திருக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈராக்கின் ஹீத் நகரைக் கைப்பற்றிய ISIS:கொபானே அருகே 18 முறை அமெரிக்க விமானத் தாக்குதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com