தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழிசை சவுந்திரராஜன், பலருடன் இணைந்து தூய்மைப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் தூய்மை இந்தியாத் திட்டத்துக்கு தமிழக பாஜக அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.
அதோடு தமிழக அரசு அலுவலகங்களிலும், தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களிலும் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்றிவிட்டு பதிலாக தற்போதைய முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதும் இன்னமும் அம்மா குடிநீர் பாட்டில்களில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தை நீக்கவில்லை, அம்மா மலிவுவிலை உணவகங்கள் அனைத்திலும் இருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை இன்னமும் நீக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

0 Responses to தமிழக அரசு அமைச்சக அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை எடுத்துவிட்டு, முதலவர் படத்தை வைக்க வேண்டும்:தமிழிசை