Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பதி ஆலய வழிபாடுகளுக்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை கறுப்புக் கொடி தாங்கிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைப் பிரதமர் தி.மு.ஜயரத்ன திருப்பதி சென்று திரும்பும் வரை, ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து திருமலை வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு அகற்றும் படையினரும், மோப்ப நாய் பிரிவினரும் திருமலை மலை பாதையில் நேற்று வியாழக்கிழமை முதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

திருப்பதி சென்ற பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி காட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்நதவர்கள் முடிவு செய்து, திருத்தணியில் இருந்து திருப்பதி வரை பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது ஊர்வலமாகச் சென்ற 100க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

0 Responses to பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு எதிராக திருப்பதியில் கறுப்புக் கொடி போராட்டம்; 100 பேர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com