Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளமை வேடிக்கையானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தச் செயற்பாட்டின் மூலம் ஜனாதிபதிக்கான அதிகாரங்களும் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு நுகேகொட பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார். அரசியலமைப்பின் 17வது திருத்த சட்டத்தை நீக்கி 18வது திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டமையே இத்தகைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியமையினூடாக அரசியலமைப்பில் புதிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படலாம். எனவே, அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையும் துஷ்பிரயோகம் செய்கிறார்.

முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவின் கூற்றினை மையமாக கொண்டு தானே உயர் நீதிமன்றத்திடம் ஆலோசனை கோருவது உரிய தீர்வல்ல. ஆகையால், ஜாதிக ஹெல உறுமயவினால் முன்வைக்கப்பட்ட 19வது திருத்த சட்டத்தை அடுல்படுத்துவதனூடாகவே இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளமை வேடிக்கையானது: ரணில் விக்ரமசிங்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com