தமிழக மீனவர்கள் 5பேர் தூக்குத் தண்டனைக்கு எதிராக மத்திய அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி இலங்கை கடற்படை, தமிழக
மீனவர்கள் 5 பேரை கைது செய்தது. தமிழகத்தின் ராமேஸ்வரத்தை சேர்ந்த
தங்கச்சி மட மீனவர்கள் மேற்கண்ட 5 பேரும் என்பதுக் குறிப்பிடத் தக்கது.
இவர்கள் படகில் போதைப் பொருள் இருந்தது எனபது இவர்கள் மீதான
குற்றச்சாட்டு. இலங்கை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று
வந்தது.வழக்கின் முடிவில் மீனவர்கள் 5 பேருக்கும் தூக்குத் தண்டனை
விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்
முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இலங்கை அதிபர்
ராஜபக்ஷே, தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து
செய்வதாகவும், ஆனால், மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக மீனவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறினார். இதை அடுத்து மனு வாபஸ் பெறப்பட்டது.
எனவே, தமிழக மீனவர்கள் 5 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று தெரிய வருகிறது.

0 Responses to இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த மனு வாபஸ்!