Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மைச் சக்திகள் தீர்மானிக்க முடியாது. பௌத்த- சிங்கள சக்திகளே அதனைத் தீர்மானிக்கும் என்று பொது பல சேனா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸூடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் அரசாங்கமும், எதிரணியும் நாட்டுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் பொது பல சேனா வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டின் தலைவர்கள் யாரென்பதை சிறுபான்மையின அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் காலம் மலையேறிவிட்டது. இனி ஒருபோதும் அதற்கு இடமளிக்கமாட்டோம். இந்த நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் சக்தியாக பொது பல சேனா உருவாகி விட்டது. சிங்கள பௌத்தர்களே இந்நாட்டை ஆள வேண்டும்.

அதனை நாமே தீர்மானிப்போம். எனவே அரச தரப்பினரும் எதிர்க்கட்சியினரும் நாட்டை காட்டிக்கொடுக்கும், சிங்கள பௌத்தர்களை காட்டிக்கொடுக்கும் வரலாற்றுத் தவறை செய்வதற்கு முன்வரக்கூடாது.

இங்கு பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேசிய தலைமைத்துவமே எமது இலக்காகும். சிங்கள பௌத்தர்களை யார் பாதுகாக்கின்றார்களோ அவர்களுக்கே எமது ஆதரவு. அவ்வாறு இல்லாவிட்டால் எமது கையில் தேசிய வேட்பாளர் இருக்கிறார். தக்க தருணத்தில் களமிறக்குவோம்” என்றுள்ளார்.

0 Responses to ஜனாதிபதியை தீர்மானிப்பது சிறுபான்மையினர் அல்ல; பௌத்த சிங்கள சக்திகளே: பொது பல சேனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com