இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்காக சாட்சியங்களைத் திரட்டினார்கள் என்று இலங்கை அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கும், தமது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தேசியப் பத்திரிகையொன்றில் வெளியான செய்தி அடிப்படை ஆதாரங்கள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவித்தும், அந்தப் பத்திரிகையின் செயற்பாட்டுக்கும் கண்டனம் வெளியிட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா ஏற்பாட்டாளரைத் தேடி பொலிஸ் வலை விரிப்பு, அனந்தியின் நடவடிக்கை பற்றி வடக்கு மாகாண சபைக்கு ஆளுநர் முறையீடு, ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிப்பு என்ற நீண்ட தலைப்பில், கடந்த 2014 ஒக்டோபர் 31ஆம் திகதி தேசிய பத்திரிகையொன்றில் வெளியான கட்டுரை முற்றிலும் பொய்யான தகவல்களை உள்ளடக்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
மேற்படி கட்டுரையில், உண்மைக்கு புறம்பானதும் தவறானதுமான கருத்தை ஏற்படுத்தக்கூடிய பல தகவல்கள் இருக்கின்றன. 'சன் மாஸ்டர்' என்றும் அழைக்கப்படும் விஜேந்திரகுமார் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஊடாக, இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணைகளுக்கு சமர்பிப்பதற்காக பொய் சாட்சியங்கள் உட்படுத்தப்பட்ட படிவங்களை சேகரிப்பதற்கான ஒரு செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது ஈடுபட்டுள்ளது என்பது அவ்வாறான பொய்யான தகவல்களில் ஒன்றாகும். இக்கூற்று ஓர் அப்பட்டமான பொய்யாகும்.
விஜேந்திரகுமார் என்பவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரு அதிகாரியோ அல்லது குறைந்த பட்சம் கட்சியின் ஒரு உறுப்பினரோ அல்ல. அவர் மேற்கொண்டு வரும் இந்த கையெழுத்துப் படிவம் சேகரிக்கும் செயற்பாடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அணுசரனையுடனோ அல்லது அனுமதியுடனோ மேற்கொள்ளப்படும் ஒன்றல்ல என ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
இதேவேளை, கையெழுத்து இடப்படாத மாதிரி குற்றச்சாட்டுப் படிவங்களை வைத்திருந்தமைக்காக அன்மையில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணா என்ற நபர் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை எதுவாக இருந்த போதிலும், அவருடைய இந்த செயலுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவ்வாறு நாம் கூறுவதற்கான முக்கிய காரணம் கிருஷ்ணா என்பவர் மேற்கொண்டு வந்த மேற்படி படிவம் சேகரிப்பு செயற்பாட்டுக்குள்ள சட்டப் பெறுமானம் மிகவும் அற்பமானதாகும் என்பதே.
மேலும், 'போர்க்குற்ற விசாரணைகள்' என தற்போது பிரபல்யம் பெற்றுள்ள சர்வதேச குற்றச்செயல் விசாரணை முன்னெடுப்பிற்காக தகவல்களை தருவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்குள்ள உரிமையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முழுமையாக ஏற்கும்.
அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு செயற்பாடாகிய இவ்விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்களை விடுத்த வண்ணம் அவர்களை வாய்மூடச் செய்வதற்கு சில அரச சக்திகள் மேற்கொண்டு வரும் முறைகேடான முயற்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும், மேற்படி விசாரணையை செயல்திறனுடன் மேற்கொள்வதற்கு வழங்கும் ஒத்துழைப்பாக தான் அறிந்துள்ள சரியான மற்றும் உண்மையான தகவல்களை தயங்காமலும், முறையாகவும் குறிப்பிட்ட சர்வதேச விசாரணையாளர்களுக்கு தெரிவிக்குமாறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சி கூறக் கூடியவர்களையும் அழுத்தமாகக் கேட்டுக்கொள்கின்றது' என்றுள்ளது.

0 Responses to ஐ.நா. விசாரணைகளுக்கான சாட்சியங்களைத் திரட்டியவர்களுடன் தொடர்பில்லை: கூட்டமைப்பு