Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் இலங்கை மீது அழுத்தக்களை வழங்கும் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீப மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு, எழுத்துமூல சாட்சி விசாரணைகளை நிறைவுசெய்துள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்களின் சாட்சியங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அமைப்புக்கள் உதவி புரிந்துள்ளதால், இந்த விடயத்தில் அதிகளவிலான அழுத்தங்கள் நாட்டிற்கு ஏற்படக்கூடும்.

எழுத்துமூல மற்றும் வாய்மூல சாட்சியங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, பெப்ரவரி மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

மனித உரிமைகள் பேரவை இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான பொறுப்பை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவைக்கு வழங்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. பாதுகாப்பு பேரவையில் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக, விஷேட அதிகாரத்தை பயன்படுத்தலாம்” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. விசாரணைகளுக்கான எழுத்து மூல சாட்சியங்கள் இலங்கை மீது அழுத்தம் செலுத்தும்: பிரதீப மஹானாமஹேவா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com