Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தற்போது நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இரு சமூகங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் ஓரளவுக்காவது துளிர்விட ஆரம்பித்துள்ளது. இத்தகைய நிலையில் நாட்டில் இடம் பெறும் தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதம் தூண்டப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பு நாளை 19ம் திக­திக்குப் பின்னர் எந்த வேளை­யிலும் வெளியி­டப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி தேர்தல் ஜன­வரி மாதம் முதல் வாரத்தில் நடத்­தப்­ப­டு­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­டது.

இந்த நிலையில் ஏட்­டிக்­குப்­போட்­டி­யான தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு ஆளும் கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும், பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­மை­யி­லான எதி­ர­ணி­யி­னரும் தயா­ரா­கி­விட்­டனர்.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் மற்றும் தோழ­மைக் ­கட்­சி­களின் தலை­வர்கள் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான பிர­சா­ரங்­களில் தற்­போதே ஈடு­பட ஆரம்­பித்து விட்­டனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் நாள்­தோறும் கொழும்­பி­லுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் செய்­தி­யாளர் மாநா­டுகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. தேர்தல் பிர­சார அலு­வ­ல­கங்கள் நாட்டின் பல இடங்­களில் அர­சாங்கத் தரப்­பி­னரால் திறக்­கப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­ப­தித் ­தேர்­தலில் இன­வாதப் பிர­சா­ரத்தை முன்­னி­லைப்­படுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­ த­ரப்­பினர் திட்­ட­மிட்­டுள்­ள­னரோ என்று சந்­தே­கிக்­கத்­தக்­க­ வ­கையில் அமைச்­சர்­களின் கருத்­துக்கள் வெளியி­டப்­ப­டு­கின்­றன.

மத்­திய கிழக்கு நாடு­களில் சீர்­கு­லைத்­த­மை­யைப் ­போன்று இலங்­கை­யிலும், அர­சியல் ஸ்திர­மற்ற நிலையை உரு­வாக்கி, தமது தேவையை நிறை­வேற்­றிக்­ கொள்ளும் தீவிர முயற்­சியில் சர்­வ­தேச சக்­திகள் ஈடு­பட்­டுள்­ளன.

இதற்­காக தற்­போ­தைய பொது அணியை இந்த சர்­வ­தேச சக்­திகள் பயன்­ப­டுத்­திக்­ கொண்­டி­ருக்­கின்­றன.

லிபி­யா­விலும் ஈராக்­கிலும் மேற்­கொண்ட அழி­வு­களை இலங்­கை­யிலும் மேற்­கொள்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்பெறு­கின்­றன.

ஏற்­க­னவே எமது நாடு அழிவைச் சந்­தித்து விட்­டது. எனவே தற்­போ­தைய சூழ்ச்­சி­க­ளுக்கு இட­ம­ளிக்­காது நாம் விழித்­துக்­ கொள்­ள­ வேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரே­ம்­ஜ­யந்த கருத்துத் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

கொழும்பில் நேற்று முன்­தினம் இடம்பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்துத் தெரி­வித்த அமைச்சர்,

புலி­களின் முக்­கிய மாநா­டொன்று மலே­சி­யாவில் இடம்பெற்­றுள்­ளது. இதில் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டுள்­ளனர். இவ்­வா­றான பின்­ன­ணியில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்கக் கோரு­வதன் மூலம் எதிர்க்­கட்­சி­களின் நோக்கம் தெளிவா­கின்­றது.

வடக்கில் எவ்­வாறு இரா­ணுவ முகாம்­களை அகற்ற முடியும். அங்கு புனர்­வாழ்வு பெற்ற ஆயி­ரக்­கணக்­கான முன்னாள் போரா­ளிகள் உள்­ளனர் என்­பதை மறந்துவிடக்­கூ­டாது என்றும் அமைச்சர் பிரே­ம்­ஜ­யந்த கூறி­யி­ருக்­கின்றார்.

இதேபோல் அர­சாங்­கத்தின் ஆட்­சி­ப் பீடத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜப­க்ச­வையும் பாது­காப்பு கதி­ரை­யி­லி­ருந்து கோத்­த­பாய ராஜ­­ப­க்சவையும் வீழ்த்­து­வ­தற்கு பல சக்­திகள் முயற்சி செய்­கின்­றன.

பொது எதி­ர­ணியின் பின்­ன­ணியில் புலம்பெயர் தமி­ழர்கள் மற்றும் விடு­த­லைப்­ பு­லி­களின் தூண்­டு­தலே உள்­ளன.

எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­­ர­ம­சிங்க, சம்­பந்­தனின் நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவே பொது எதி­ரணி களத்தில் குதிக்­கின்­றது என்று அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக் ­கட்­சி­யா­ன­ தே­சிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­மை­ய­கத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் விமல் வீர­வன்ச இவ்­வாறு கூறி­யி­ருக்­கின்றார்.

தனி ஈழத்­தினை உரு­வாக்கும் நோக்­கத்தில் தற்­போ­தைய ஆட்­சியை கவிழ்க்க வேண்டும் என்ற முயற்­சியில் புலம்பெயர் புலி ஆத­ர­வா­ளர்கள் இங்­குள்ள தமிழ் அர­சியல் தலை­மை­க­ளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்­ப­டு­கின்­றனர்.

விடு­த­லைப் ­பு­லி­களை பழி­ வாங்­கி­ய­­மைக்­காக பழி­ தீர்க்கும் புலி ஆத­ர­வா­ளர்­களின் திட்­டத்­திற்கு அமை­யவே தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்பு செயற்­பட்டு வரு­கின்­றது.

தமிழ், முஸ்லிம் வாக்­குகள் முழு­மை­யாக எதி­ர­ணிக்குச் சேரும்; சிங்­கள வாக்­கு­களைப் பெற்­றுக்­ கொண்டால் போதும் என்ற நம்­பிக்­கையில் பொது எதி­ரணி களத்தில் குதித்­தி­ருக்­கின்­றது.

இவர்­களின் எதிர்­பார்ப்பு வடக்கு, கிழக்­கிற்கு ஏற்ற அர­சாங்­கத்தை அமைப்­பதை தவிர முழு நாட்­டிற்­கான அர­சாங்கம் அல்ல. எனவே சிங்­கள பௌத்த மக்கள் இந்த சூழ்ச்­சிக்கு ஏமாந்­து­ வி­டக்­கூ­டாது என்றும் அமைச்சர் விமல் வீர­வன்ச செய்­தி­யாளர் மாநாட்டில் கூறி­யுள்ளார்.

இவ்­வாறு ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பு வெளியா­வ­தற்கு முன்­னரே இன­வாத நோக்கம் கொண்ட பிர­சா­ரங்­களை அமைச்­சர்கள் ஆரம்­பித்­துள்­ளனர்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றியைப் பெற்று விட வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­திற்­காக இன­வா­தத்தைக் கக்கும் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­மை­யையே அமைச்­சர்­களின் இந்தக் கருத்­துக்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்பும் புலம்பெயர்ந்த தமி­ழர்­களும் ஒன்­றி­ணைந்து நாட்­டுக்கு எதி­ராக சூழ்ச்சி செய்­வதைப் போன்ற தோற்­றப்­பாட்டை உரு­வாக்கும் வகை­யி­லேயே இத்­த­கைய கருத்­துக்கள் அமைந்­துள்­ளன.

ஜனா­தி­பதி தேர்­தலில் எத்­த­கைய முடி­வினை எடுப்­பது என்­பது தொடர்பில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு இன்­னமும் தீர்­மானம் எத­னையும் எடுக்­க­வில்லை.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் ஆத­ரவை அர­சாங்­கமும் எதி­ர­ணியும் கோரி­யுள்ள போதிலும், இந்த விவ­காரம் தொடர்பில் தமிழ் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி மனச்­சாட்­சிக்கு ஏற்­ற­வ­கையில் தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அறி­வித்­துள்ளார்.

எம்மைப் பயன்­ப­டுத்தி இனத் துவே­சத்தைக் கிளப்பி தேர்தல் முடி­வு­களை சாத­க­மாக்கிக் கொள்­வ­தற்கு எவ­ருக்கும் நாம் சந்­தர்ப்பம் வழங்­க ­மாட்டோம். ஜனா­தி­பதித் தேர்­தலில் எத்­த­கைய முடி­வினை எடுப்­பது என்­பது தொடர்பில் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி மனச்­சாட்­சியின் படி தீர்­மானம் எடுப்போம் என்றும் சம்­பந்தன் எம்.பி. தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்த முறை ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜப­க்சவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான பசில் ­ரா­ஜ­பக்ச அழைப்பு விடுத்­துள்ளார்.

இந்த அழைப்­பினை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உட­ன­டி­யாக நிரா­க­ரிக்­காது அமைச்­சரின் அழைப்பு தொடர்பில் ஆழ­மாக கவ­னத்தில் எடுக்­க­வுள்­ள­தாகக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஜனா­தி­ப­தி­த் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் ஆத­ரவை அமைச்சர் பசில் ராஜபக்ச கோரி­யுள்ள நிலையில் அது குறித்து ஆழ­மாக பரி­சீ­லிக்­கப்­படும் என்று சம்­பந்தன் பதில் அளித்­துள்ள சூழ்­நி­லையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் மற்றும் கட்­சி­களின் தலை­வர்கள் கூட்­ட­மைப்பை சம்­பந்­தப்­ப­டுத்தி இன­வா­தக் ­க­ருத்­துக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர்.

இத்­த­கைய செயற்­பா­டா­னது அர­சாங்­கத்தில் உள்ள அமைச்­சர்கள் இரு­வேறு கோணங்­களில் செயற்­ப­டு­வ­தையும் எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

உண்­மை­யி­லேயே அர­சியல் சுய­ந­லன்­க­ளுக்­காக இன­வா­தக் ­க­ருத்­துக்­களை நாட்டில் மேலோங்கச் செய்­வ­தா­னது தமிழ், சிங்­கள சமூ­கங்கள் மத்­தியில் மேலும் மேலும் முரண்பாடுகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்துவதற்கே உதவும்.

கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்தத்தினால் பெரும் அழிவுகளை நாடு எதிர்நோக்கியிருந்தது.

தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இரு சமூகங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் ஓரளவுக்காவது துளிர் விட ஆரம்பித்துள்ளது.

இத்தகைய நிலையில் நாட்டில் இடம்பெறும் தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதம் தூண்டப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.

எனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தத் தரப்பானாலும் தமது கொள்கைகள், கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களில் ஈடுபடவேண்டும்.

இதனைவிடுத்து, இனத் துவேசத்தைக் கிளப்பி பிரச்சாரங்களில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை.

இந்த விடயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

0 Responses to தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதம் தூண்டப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com