Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் வகித்து வந்த அமைச்சு உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களிலிருந்து ஜாதிக ஹெல உறுமய விலகியது.

ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஜாதிக ஹெல உறுமயவின் பொது செயலாளரும், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுகள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் பிரதி பொதுச்செயலாளரும், மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அரசாங்கத்திடம் தமது கட்சி முன்வைத்த கோரிக்களை நிராகரித்த நிலையில் தாம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஹெல உறுமயவின் இந்த தீர்மானமானது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுக்கப்பட்ட பிறந்தநாள் பரிசாகும் என்று கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கல், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதி செய்தல், ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்ககை எடுத்தல் உள்ளிட்ட 35 அம்சங்கள் அடங்கிய கோரிக்கையை அரசாங்கத்திடம் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த போதிலும், அவற்றை நிறைவேற்றும் முடிவில் அரசாங்கம் இல்லை என தெளிவாகிறது என்று ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் செயற்குழு கூட்டத்தின் போது சுமார் 4 மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்தக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

(குறித்த ஊடகவியலாளர் மாநாடு இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்திலும் தொடர்கிறது)

0 Responses to ஜாதிக ஹெல உறுமய அமைச்சு பதவிகளிலிருந்து விலகியது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com