Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹலோ தலைவரே.. இரண்டு மாசத்திலே அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தாகணும்னு சுப்ரீம்கோர்ட் கெடு விதிச்சிருக்கிற நிலையில், கார்டன் தரப்பிலிருந்து பெருசா எந்த மூவ்வும் நடக்கலைங்கிறதை போன முறை பேசியிருந்தோம்.

பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் மனு போட்டுட்டு, அப்பீல் காப்பிகளுக்கான செலவுத் தொகை 85ஆயிரத்தைக் கட்டலைங்கிறதையும் பேசியிருந்தோம்.

அது மட்டுமில்லைப்பா.. சொத்துக் குவிப்பு கேஸில் தன்னோட வக்கீல்கள் சொதப்பிட்டாங்கன்னு கடுப்பிலே இருக்கிற ஜெ., அவங்களை டோஸ் விட்டது பற்றியும்கூட பேசியிருந்தோமே..

ஆமாங்க தலைவரே.. வாங்கிக் கட்டிக்கொண்ட வேதனையோடு கோர்ட்டில் கட்ட வேண்டிய பணத்தையும் வக்கீல்கள் கட்டிட்டாங்க.

உடனே நீதிபதி குன்ஹா தன்னோட கோர்ட் ஊழியர்களைக் கூப்பிட்டு, நீங்களும் நானும் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது பெரிசில்ல. இந்த 35ஆயிரம் பக்கம் டாக்குமெண்ட்ஸையும் ஜெராக்ஸ எடுத்துக் கொடுத்திடுங்க. இல்லைன்னா, நம்மகிட்டேயிருந்து ஆவணங்களோட ஜெராக்ஸ் வராததாலதான் அப்பீல் தாக்கல் செய்ய முடியலைன்னு சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் அவகாசம் கேட்பாங்க. அதற்கான வாய்ப்பை நாம கொடுத்ததா இருக்கக்கூடாது. நம்ம வேலையிலே சரியா இருக்கணும். பணம் கட்டாம இருந்திருந்தாங்கன்னா அவங்க மனுவை டிஸ்மிஸ் பண்ணியிருப்பேன். கட்டிட்டதால நம்ம வேலைகளை சீக்கிரமா முடிக்கணும்னு சொல்லியிருக்காரு. ஸ்பெஷல் கோர்ட்டில் ஜெராக்ஸ் வேலைகள் வேகமா போய்க்கிட்டிருக்குது.

இதைக் கேள்விப்பட்ட போயஸ் கார்டன் ஷாக் ஆயிடுச்சு. காரணம் இதை காரணமாக சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு மேலும் சில மாதங்கள் டைம் வாங்கலாமென்று முடிவு செய்திருந்தார்களாம். அதோடு, ஸ்ரீரங்கம் தொகுதி காலியா இருப்பதா அறிவிக்கணும்ங் கிறதுக்காக தமிழக சபாநாயகர் தனபால், பெங்களூரு கோர்டடிடம் தீர்ப்பு நகல் கேட்டு, அக்டோபர் 25ந் தேதி எழுதிய கடிதத்தை நாலு நாள் கழிச்சி 29-ந் தேதிதான் போஸ்ட் செய்தார். அந்த கடிதம் கிடைச்சவுடனேயே, தீர்ப்பு நகலை தமிழ்நாடு கவர்மெண்ட்டுக்கு அனுப்பச் சொல்லிட்டாரு குன்ஹா. இதுவும் அடுத்த ஷாக்.

பெங்களூரிலே குன்ஹான்னா டெல்லியிலே ஓ.பி.சைனி. 2ஜி கேஸ்களை அவர்தானே விசாரிக்கிறாரு. அதனால அவர் பக்கம் தான் இந்திய அரசியல் மற்றும் ஊடகத்துறையோட மொத்த கவனமும் திரும்பியிருக்குது. அக்டோபர் 29-ந் தேதியன்னைக்கு 2ஜி கேஸில் முக்கிய மூவ் இருக்கும்னு சொல்லியிருந்தியே.

ஆமாங்க தலைவரே.. சைனி கோர்ட்டை வைத்து நான் சொல் லலை. சுப்ரீம் கோர்ட் டை வச்சித்தான் சொல்லியிருந்தேன். அதாவது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கம்பெனிகளெல்லாம் தகுதியில் லாத கம்பெனிகள்ங்கிறது சி.பி.ஐ தரப்போட குற்றச் சாட்டு. ஆனா, சி.பி.ஐ டைரக்டர் ரஞ்சித்சின்ஹா இது பற்றி விசாரிச்சி, அந்தக் கம்பெனிகளெல்லாம் தகுதியானதுதான்னு ஃபைலில் குறிப்பு எழுதியிருந்தாரு. அந்தக் குறிப்பு இப்ப சுப்ரீம் கோர்ட்டில் இருக்குது. இது சம்பந்தமா 29-ந் தேதியன்னைக்கு தலைமை நீதிபதி தத்து பெஞ்ச் எடுக்கிற முடிவை எதிர்பார்த்துதான் அப்படி சொல்லியிருந்தேன். ஆனா ஒட்டுமொத்த ஃபோகஸூம் கறுப்புப்பண விவகாரத்தில் திரும்பிட்டதால, 29-ந் தேதியன்னைக்கு இந்த கேஸ் ரீச் ஆகலை.

எப்ப ரீச் ஆகுமாம்?

இரண்டு, மூணு வாரம் தள்ளி விசாரணைக்கு எடுத்துக்கலாம்னு தலைமை நீதிபதி சொல்லியிருக்காரு. அதற்கு, குற்றஞ்சாட்டப்பட்ட தரப்போட வக்கீல், கீழ்க்கோர்ட்டில் ட்ரையல் போய்க்கிட்டிருப்பதால இது சம்பந்தமா சீக்கிரமா முடிவு பண்ணணும்னு கேட்டிருக் காரு. அதற்கு தலைமை நீதிபதி, கம்பெனிகளோட தகுதி சம்பந்தமான சி.பி.ஐ டைரக்டரோட குறிப்பை ஆழ்ந்து கவனிக்கணும். அதற்கு டயம் வேணும். ட்ரையல் நடக்கட்டும். அது முடிவதற்குள்ளே எங்க முடிவைச் சொல்லுவோம். அதற்கப்புறம் ட்ரையல் கோர்ட் இந்த குறிப்புகள் பற்றி முடிவெடுக்கும்னு சொல்லியிருக்காரு.

2ஜி தொடர்பா அமலாக்கப்பிரிவு போட்டிருக்கும் கேஸிலிருந்து தயாளு அம்மாளை விடுவிக்கணும்னு சுப்ரீம்கோர்ட்டில் போட்ட மனுவிலும் கீழ்க்கோர்ட் முடிவு செய்யட்டும்னு சொல்லி டிஸ்மிஸ் செய்யப் பட்டிருக்குதே?

இதுவும் தலைமை நீதிபதி தத்து பெஞ்ச்சில்தான் விசாரணைக்கு வந் தது. தயாளு அம்மாள் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் சரண் கிட்டே தத்து தமிழி லேயே, இந்த கோரிக்கையை நீங்க கீழ்க்கோர்ட் டில் சொல்லலா மேன்னு கேட்டிருக் காரு. சரணுக்குத் தமிழ் தெரியாது. அதனால அவர் என்னன்னு புரியாம முழிக்க, அதையே இங்கிலீஷில் விளக்கியிருக்காரு தலைமை நீதிபதி. அப்ப வக்கீல் சரண், இப்ப நான் உங்க முன்னே முழிச்ச மாதிரிதான் என்னோட கட்சிக்காரர் தயாளு அம்மாவும் முழிப்பாங்க. அந்தளவுக்கு அவங்களுக்கு நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருக்குது. உடல்நலம் பாதிக்கப் பட்டிருக்குது. கோர்ட்டால் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் டீமே சர்டிபிகேட் பண்ணி யிருக்குதுன்னு சொல்ல, கீழ்க்கோர்ட்டில் இதை சொல்லலாமேன்னு தலைமை நீதிபதி பெஞ்ச் சொல்லிடிச்சி. சி.பி.ஐ. டைரக்டர் குறிப்பு சம்பந்தமான வழக்கையும், தயாளு அம்மாளோட கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட் நிராகரிக்கலை. அதை கீழ்க்கோர்ட் கவனிக்கும்னு சொல்லியிருக்குது. 2ஜி வழக்கு விசாரணையில் கறாரா இருக்கிற நீதிபதி ஓ.பி.ஷைனி கையில் தான் இது சம்பந்தமான முடிவுகள் இருக்குது.

ஏர்செல்-மேக்ஸிஸ் கேஸ் சம்பந்தமா மாறன் சகோதரர்களான கலாநிதிக்கும் தயாநிதிக்கும் ஷைனி கோர்ட் சம்மன் அனுப்பியிருக்குதே?

இந்தக் கோர்ட் தங்களோட கேஸை விசாரிக் கக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டில் மாறன் சகோ தரர்கள் பெட்டிஷன் போட்டு அது ஏற்கனவே டிஸ்மிஸ் ஆயிடிச்சி.. இந்த நிலையிலேதான், அக்டோபர் 29-ந் தேதியன்னைக்கு ஷைனி கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, இவர்கள் மீதான குற்றச் சாட்டு சரியானதுதான்னு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஷைனி, மார்ச் 2-ந் தேதி மாறன் சகோதரர்களும் ஏர்செல்-மேக்ஸிஸ் ஓனர் அனந்தகிருஷ்ணனும் அந்த நிறுவனத்தோட நிர்வாகி களும் ஆஜராகணும்னு சம்மன் அனுப்பியிருக்காரு. அனந்தகிருஷ்ணனும் அவரோட நிறுவனத்துக் காரங்களும் மலேசியாவில் இருப்பதால, வெளிநாட்டி லிருந்து இங்கு வருவதில் உள்ள நடைமுறைக் காரணங் களை வச்சித்தான் மார்ச் மாசம் வரை அவகாசம் தரப்பட்டிருக்குது. அதோடு 2ஜி மெயின் கேஸில் பிப்ரவரி மாசத்தில் தீர்ப்பு வந்திடும். அதனால ஏர் செல்-மேக்ஸிஸ் விவகா ரத்துக்கு அதற்கப்புறம் கிடுக்கிப்பிடி போடலாம்னு ஷைனி டைம் எடுத்திருக் காரு.

சம்மனுக்கு ஆஜரானப்பதானே கனிமொழியை ரிமாண்ட் பண்ணி னாங்க. கலாநிதி- தயா நிதிக்கும் அதே மாதிரியான நெருக்கடியான நிலைதானே?

சி.பி.ஐ. தரப்பு அப்படித்தான் வாதாடும். தயாநிதி இப்ப டெல்லியிலேயேதான் பெரும்பாலும் இருக்காரு. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியை அடிக்கடி சந்திக்கிறாரு. ரிமாண்டுக்கு சி.பி.ஐ வலியுறுத்தாம இருக்கணும்னும், கேஸில் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்னும் ஜெட்லிகிட்டே தயாநிதி சொல்றாராம். அதோடு, பா.ஜ.க தலைவர் அமித்ஷா வீட்டிலும் தயாநிதியை அடிக்கடி பார்க்க முடியுதுன்னு டெல்லி அரசியல் பிரமுகர்கள் சொல்றாங்க. பா.ஜ.க..விலே சேரவும் தயார்னு அமித்ஷாகிட்டே தயாநிதி உறுதி கொடுத்திருப்பதா தகவல் வந்ததால, அது பற்றி விசாரிச்சேங்க தலைவரே.. அப்படியெல்லாம் தயாநிதி சொல்லலையாம். கேஸ் விஷயத்தில் மட்டும்தான் அவர் சீரியஸா மூவ் பண்ணிக்கிட்டிருக்காராம்.

தமிழகத்தில் கூட்டணிகள் மாறுவதற்கான சூழல்கள் தெரியுதே? பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டுத் திருமணத்தில் புதுக்கூட்டணிக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்குதே?

தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.கவைக் கொண்டு வர நடக்கும் முயற்சிகள் பற்றி நம்ம நக்கீரன்தான் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்குது. அதுபோல ம.தி.மு.கவின் சிக்னல் பற்றியும் நக்கீரன்தான் சொல்லிக் கிட்டிருக்குது. அன்புமணி மகள் திருமணத்தில் அதற்கான முன்னோட்டம் வெளியாகியிருக்கு. எதிரியை வீழ்த்துற நாளான சூரசம்ஹாரம் நடந்த அன்னைக்குத்தான் தி.மு.க.வின் இந்த கூட்டணிக்கான அச்சாரம் ஆரம்பமாகியிருக்குதுன்னு கட்சி நிர்வாகிகள் பேசிக்கிறாங்க. அன்புமணிக்கு 91-ல் திருமணம் நடந்தப்ப சீஃப் கெஸ்ட் அப்ப முதல்வரா இருந்த ஜெ.தான். இப்ப அன்புமணி மகள் கல்யாணத்தில் கலைஞர் வாழ்த்தியிருக்காரு.

காலச்சக்கரமும் அரசியல் சூழலும் அப்படித்தான் வேகமா சுழலும்ப்பா.

ராமதாஸ் வீட்டுத் திருமணத்துக்கு முதல் நாள் கலைஞருக்கு கடுமை யான கண்வலி. டாக்டர் வீட்டருகே வந்து ட்ரீட்மெண்ட் செய்தப்ப, சாயங் காலம் நடந்த ரிசப்ஷனில் மு.க.ஸ்டாலின் கலந்துக்கிட்டாரு. அங்கே வைகோவை அவர் சந்திப்பாருங்கிறது பற்றி ஏற் கனவே தகவல்கள் மீடியாக்களில் வெளியாகியிருந்ததால எதிர் பார்ப்பு அதிகமா இருந்தது.

அந்த எதிர்பார்ப்புக்கு இன்னொரு காரணமும் இருக்கு துப்பா. செப்டம்பர் 15-ந் தேதி பூந்தமல்லியில் நடந்த ம.தி.மு.க மாநாட்டில் ஜெயலலிதா ஆட்சி யோட சீர்கேட்டைப் பற்றி வைகோ விளாசியதைப் பற்றி, முரசொலி யில் கலைஞர் பாராட்டி எழுதி யிருந்தாரு. அப்ப அதை ஸ்டாலின் ரசிக்கலை. தி.மு.கவை வெளியார் தயவு இல்லாம வளர்க்கணும்னு அவர் நினைச்சாரு. ஆனா, கட்சி நிர்வாகிகள் பலரும் ஸ்டாலின் கிட்ட, நம்ம கூட்டணிக்கு வைகோ தேவைன்னு களநிலவரத்தைச் சொல்ல, அவரும் ம.தி.மு.கவை கூட்டணியில் சேர்க்க ரெடியாயிட்டாரு.

ஆமாங்க தலைவரே.. அதை ராமதாஸ் வீட்டு திருமண வரவேற்பு விழாவில் பார்க்க முடிந்தது. குடும்பத்தோடு ரிசப்ஷனுக்கு வந்த ஸ்டாலின், மணமக்களை வாழ்த்திட்டு, ராமதாஸ்கிட்டேயும் அன்புமணிகிட்டேயும் பேசிட்டு, வைகோ வந்துட்டாரான்னு விசாரிச் சிருக்காரு. முன்கூட்டியே குடும்பத்தோடு வந்திருந்த வைகோ வி.ஐ.பி.களுக்கான டைனிங் ஹாலில் இருப்பதை தெரிஞ்சிக்கிட்டு ஸ்டாலின் அங்கே போக, ஸ்டாலின் வருவதைத் தெரிஞ்சிக்கிட்டு வைகோவும் அவரை எதிர் கொண்டு வரவேற்க, பல வருசங்களுக்குப்பிறகு இரண்டு பேரும் சந்திச்சிக்கிட்டாங்க. தலைவ ரோட உடல்நிலை எப்படி இருக்குன்னு கலைஞரைப் பற்றி வைகோ விசாரிக்க, வைகோவோட அம்மா மாரியம்மாளின் உடல்நிலை பற்றி ஸ்டாலின் விசாரிச்சாரு. அவங்களைச் சுற்றியிருந்த கட்சிக்காரங்களுக்கு அப்பவே கூட்டணி நம்பிக்கை வந்திடிச்சி.

மறுநாளும் வைகோவும் ஸ்டாலினும் சந்திச்சிருக்காங்களே?

தேவர் ஜெயந்திக்கு ஒரே ஃப்ளைட்டில் இருவரும் போனதால, சென்னை ஏர்போர்ட்டிலும், மதுரை ஏர்போர்ட்டிலும் இருந்த கட்சி நிர்வாகிகளை வைகோகிட்டே ஸ்டாலின் அறிமுகப் படுத்தியிருக்காரு. அதேநாளில், கண்வலி முழுசா குறையலைன்னாலும் டாக்டர்கள் அட்வைஸ்படி மாமல்லபுரத்துக்குப்போய் ராமதாஸ் வீட்டுக் கல்யாணத்தில் கலைஞர் கலந்துக்கிட்டாரு.

திருமண விழாவில் கலைஞரும் ராமதாசும் ரொம்ப உணர்வுப்பூர்வமா பேசியிருக்காங்களே?

ஆமாங்க தலைவரே.. அதுக்கு முன்னாடி கூட்டணிக்கு வைகோ வருவது பற்றி சொன்ன கலைஞர், வைகோ எனக்கு பகை அல்ல. நீண்டகால நண்பர்னு சொன்னாரு. வழக்கமா தம்பின்னு சொல்ற கலைஞர், நண்பர்னு சொன்னதன் மூலம் ஒரு கட்சித்தலைவரா வைகோவை பெருமைப்படுத்தியிருக்காருன்னு ம.தி.மு.க வட்டாரத்தில் சந்தோஷம். திருமண விழாவிலும் தன்னை முன்னாள் முதலமைச்சர்னு சொல்லாமல் தாத்தான்னே மணமக்கள் சொல்லியிருக்கலாம்னும் இது தன்னோட பேத்தி திருமணம்னும் கலைஞர் பேசுனப்ப ராமதாஸ், அன்புமணி எல்லோருமே நெகிழ்ந்துபோயிட்டாங்க.

திருமண அழைப்பிதழை கோபாலபுரத்துக்கு வந்து கொடுத்து, கட்டாயம் வரணும்னு கலைஞரை ராமதாஸ் அழைச்சப்பவே, நான் கட்டாயம் வந்திடு வேன். நீங்க வராம இருந்திடாதீங்கன்னு கலைஞர் சொன்னாராம். ராமதாஸ் உள்பட எல்லோரும் கலகலன்னு சிரிச்சிருக்காங்க.

திருமண விழாவிலும் ராமதாஸ் தன்னோட நன்றியுரையிலே கலைஞரோட அரசியல் நாகரிகத்தை யும் அவருக்கும் தனக்குமான நட்பையும் பற்றி உணர்வுப்பூர்வமா பேசினாரு. கலைஞர்கிட்டேயிருந்து உழைப்பு, நேரம் தவறாமை, கட்சி நடத்தும் பாங்கு இதையெல்லாம் இன்னமும் கத்துக்கிட்டிருப்பதா ராமதாஸ் சொன்னப்ப பலமான கைதட்டல்.

புதுக்கூட்டணி அமைந்தால் அதை தி.மு.கவின் பொதுக்குழுவும் செயற்குழுவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளும்னு கலைஞர் சொல்லியிருப்பதால அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருக்குது. அதே நேரத்தில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்படுது. தி.மு.க கூட்டணியில் இருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு ராமதாஸ் வீட்டுத் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படலை. அதுபோல தி.மு.க தன்னோட கூட்டணிக்கு எதிர்பார்க்கும் விஜய காந்த்துக்கும் சரியான அழைப்பில்லையாம். அப்ப டின்னா புதுக்கூட்டணியிலே இந்த இரண்டு கட்சிகள் இருக்குமாங்கிற பேச்சு இப்பவே கிளம்பிடிச்சி.

0 Responses to ஜெயலலிதாவுக்கு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தந்த ஷாக்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com