Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுக்கும் வேட்பாளர்கள் எவரும் இல்லாத நிலையில், அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் கூட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறுமென்பது எமக்கு தெரியாது இருப்பினும், தேர்தல்கள் ஆணையாளர் நிர்ணயிக்கும் திகதியில் வேட்பு மனுவினை தாக்கல் செய்து தேர்தலுக்கு முகம்கொடுக்க நாம் தயாராகவிருக்கின்றோம்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை நாம் நிறைவு செய்துள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் பணிகளை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம். ஒரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியவர்கள் தனக்கு எந்தவொரு யானையிடமிருந்தும் தொந்தரவு இல்லையென பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

யானைகள் மட்டுமன்றி எந்தவொரு வேட்பாளரிடமிருந்தும் எமது ஜனாதிபதியவர்களுக்கு சவால்கள் இல்லாத நிலையில் மீண்டும் அவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது உறுதி. ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசாங்கத்திற்கு சாதகமான சூழ்நிலை உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 09 கட்சிகளைக் கொண்டுள்ளது. தேர்தல் பொறுப்புக்களை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பொறுப்பாளரென்ற வீதம் நியமிக்கப்பட் டுள்ளனர். 22 மாவட்ட அலுவலகங்களில் அநேகமானவை திறக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தப்படும் இடங்களில் விசேட அலுவலகங்கள் ஆரம்பிக்கப் படவுள்ளன.

இதனைத் தவிர தலைவர்கள் மட்டக் கூட்டங்கள், கட்சி மட்டக் கூட்டங்களென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அடிக்கடி சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. அபிவிருத்திப் பணிகளுடன் அரசாங்கம் தேர்தல் செயற்பாடுகளை மிகுந்த அவதானத்துடன் கையாண்டு வருகின்றது” என்றுள்ளார்.

0 Responses to ராஜபக்ஷவின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.கூ தேர்தலுக்கு எப்போதும் தயார்: சுசில் பிரேமஜயந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com