தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, ஞான தேசிகன் தமாகா சார்பாக வாழ்த்துக்கள் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்ட நிலையில் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்தார், ஜி.கே.வாசன். இவருடன் ஞானதேசிகனும் உடனிருந்தார். அப்போது பேசிய ஞானதேசிகன், புதிதாக பொறுப்பேற்றுள்ள இளங்கோவனுக்கு தமாகா சார்பில் வாழ்த்துக்கள் என்று கூறினார். செய்தியாளர்கள் உடனடியாக தமிழ் மாநில காங்கிரஸ் உருவாகுமா என்று கேள்வி எழுப்பினர்.
மாவட்டம் வாரியாக தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், தொண்டர்களின் ஆலோசனைக்குப் பின்னர் படிப்படியாக முடிவெடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவதுக் குறித்தும் வருகிற 3ம் திகதி அறிக்கையாக அளிப்போம் என்று ஜிகே.வாசன் கூறியுள்ளார்.புதிதாக வழங்கப்பட இருந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அட்டையில் காமராஜர் மற்றும் மூப்பனார் படம் இடம்பெறாததுக் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜிகே.வாசன், காமராஜர், மூப்பனார் இல்லாமல் தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக மக்களின் உணர்வுகளை சமீப காலமாகவே காங்கிரஸ் அரசு மதிக்கவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

0 Responses to தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாழ்த்து!