Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுவதாக இல்லை என்பது போல ஜெயலலிதா மீது புதிய வழக்கு தொடரப் போகிறேன் என்று, பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடுத்தவர் சுப்ரமணிய சுவாமிதான். சுப்ரமணிய சுவாமி மீது சமீபத்தில் ஜெயலலிதா 4 அவதூறு வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளில் தாம் நேரில் ஆஜராவதில் இருந்தும், இந்த வழக்கு விசாரணையில் இருந்தும் தம்மை விடுவிக்க வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணிய சுவாமி மனுத் தொடுத்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சுப்ரமணிய சுவாமியின் மீதான விசாரணைக்குத் தடை வித்து உள்ளனர்.

இந்நிலையில்தான் ஜெயலலிதா மீது புதிய வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ள அவர், ஜெயலலிதாவுக்குத் தொடர்பாக பினாமி பெயரல் புதிய வர்த்தக நிறுவனங்கள் நடைபெற்று வருவது தொடர்பாகத் தான் வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

0 Responses to ஜெயலலிதா மீது புதிய வழக்கு தொடரப்போகிறேன்: சு.சுவாமி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com