உருவம் என்றென்றும்
எம் நினைவை விட்டகலாது.
என்றும் அன்புகுரியவனாய்
ஆற்றலில் என்றும் பெரியவனாய்
ஆளுமையில் என்றும் சிறந்தவனாய்
பண்பினில் என்றும் உயர்ந்தவனாய்
பழகுவதற்கு என்றும் இனிமையானவனாய்
எம்மிடையே வாழ்ந்தவனே
உன் தடம் பற்றி நாங்கள் பயணிக்கின்றோம்
எம் இனத்தின் விடுதலை வரும் வரை
ஓயமாட்டோம்
உன் கல்லறை மீது சத்தியம் செய்கிறோம்
துயில் கொள்ளுங்கள் நீங்கள்
நின்மதியாக துயில் கொள்ளுங்கள்.
கருக்கொண்ட எம்மை
அழிப்பதற்கு எவனுமில்லை
பிரசவிக்கப் பிறந்தவர்கள் நாங்கள்
அழிவதற்கு நாம் இல்லை
வீறுகொண்டு எழுவோமேதவிர
விதையின்றி விழாமட்டோம்
ஒருபோதும் !!!!!!
" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
-றஞ்சன்-
0 Responses to அழிவதற்கு நாம் இல்லை வீறுகொண்டு எழுவோமேதவிர விதையின்றி விழாமட்டோம் ஒருபோதும்