Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை 09.00 மணி முதல் முன்னெடுத்திருந்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் சற்று முன்னர் (மதியம் 12.20) நிறைவுக்கு வந்தது.

விமான நிலைய ஊழியர்கள் 5 கோரிக்கைகளை முன்வைத்தே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

விமான நிலையத்துக்கான மின்சாரம் இன்று காலை 10.03க்கு துண்டிக்கப்பட்டதையடுத்து மின்பிறப்பாக்கியூடாக மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. எனினும், மின்பிறபாக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், மின்சாரத்தை 10.45க்கு மீண்டும் துண்டித்தனர்.

அதுமட்டுமன்றி, விமான நிலையத்தின் தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால், குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கைகள் யாவும் முற்றாக செயலிழந்தன.

10,000 கொடுப்பனவு, வைத்திய காப்புறுதி, 4 சதவீதம் அனர்த்த கடன், பியா புத்து மன்றத்தின் ஊடாக தொழில்வாய்ப்பு, பாதுகாப்பு பிரதானி தொடர்பில் விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய சுதந்திர ஊழியர் சங்கத் தலைவர் பி.முகந்திரம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர் சங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து, பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பணிகள் வழமைக்கு திரும்பியது.

0 Responses to கட்டுநாயக்கா விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com