பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.வை நீக்குமாறு பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’கூட்டணி கட்சிகளுக்கு இருக்க வேண்டிய தேசிய பார்வைக்கு முரணாக ம.தி.மு.க. நடந்துகொள்கிறது. அதன் தலைவர் வைகோ, தேசியத்துக்கு எதிராகவும், பிரிவினைவாதத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.
எனவே, பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்குமாறு கட்சி தலைவர் அமித்ஷா, தமிழக பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோருடன் பேசி உள்ளேன். ம.தி.மு.க.வை நீக்குவதற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் வைகோ.
இலங்கையின் கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவது போன்றவற்றுக்கு மோடியின் தலைமையிலான மத்திய அரசு இலங்கையிடம் கடைபிடிக்கும் மென்மைப் போக்கே காரணம் என்று குற்றம்சாட்டி வரும் வைகோ, போதைப் பொருள் கடத்தியதாக பொய்க்குற்றம் சாட்டி சமீபத்தில் 5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததற்கும் தனது பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, ‘5 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததற்கு மோடி அரசு கொடுத்த தைரியமும் துணிச்சலும்தான் காரணம். 5 பேரின் உயிருக்கும் மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கொடுங்கோலன் ராஜபக்சேக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். அவரை பா.ஜ.க.வினர் கண்டித்தார்களா? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகாவது மத்திய அரசு உணரவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்’ என்று எச்சரித்திருந்தார்.
இது பா.ஜ.க.வினரிடையே வைகோ மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சுப்பிர மணிய சாமி இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.

0 Responses to தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுகவை நீக்க வேண்டும்: சுப்ரமணிய சாமி