இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தீர்ப்புக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை கொழும்பு நீதிமன்றம் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2010ம் ஆண்டு இவர்கள் படகில் போதைப் பொருட்கள் இருந்தது என்று இவர்கள் கைது செய்யப்பட்டனர். கொழும்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 30ம் திகதி இவர்களுக்கு தூக்குத் தண்டனை என்று கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த மீனவர்களின் தீர்ப்புக்கு எதிராகவும், இவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து தமிழகத்தின் 13 மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம், மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். நாகை, திருவையாறு, திருவாரூர், காரைக்கால்,புதுவை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதன் பேரில் தங்களது வேலை நிறுத்த அறிவிப்பைக் கைவிட்டு நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்கக்க் கிளம்பியுள்ளனர். இவர்களை நம்பி உள்ள 30 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவே மீனவர்கள் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளனர் என்றும் தெரிய வருகிறது.
இதற்கிடையில் இலங்கையிöல் ஐப்பசி மாத ஆன்மீக விடுமுறை காரணமாக நேற்றும், இன்றும் மத்திய அரசால் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று தெரிய வருகிறது. எனவே வருகிற திங்கட்கிழமை அன்று, இலங்கை உச்ச நீதிமன்றத்தில், தமிழக மீனவர்களின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய உளது என்று தெரிய வருகிறது.

0 Responses to இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மனு!