ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன், இலங்கை மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள இலங்கை, அவரது கருத்துக்கள் வருந்தத்தக்க விடயமென்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் விசேட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் எல்லை மீறிய வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது வருந்தத்தக்க விடயமாகும். ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட, இறையாண்மையுள்ள நாட்டின் மீது அவர் எல்லைமீறிய வாரத்தைகளை பயன்படுத்தியுள்ளார்.
மேலும், ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது அவர் அவதூறு ஏற்படுத்தியுள்ளதோடு, இழிவும்படுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, இலங்கை அரசு தொடர்ந்து தொடர முயன்று வருகின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடியவையாகும்” என்றுள்ளது.
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் முன்னெடுத்துள்ள விசாரணைகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருவதாக ஏற்கனவே தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன், இலங்கையின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு தெரிவிப்பு!