Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை உச்சரிக்காமல் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களால் அரசியல் நடத்த முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

அரசியல் நடத்தவும், உண்ணவும், உறங்களும் அரசாங்க அமைச்சர்களுக்கு விடுதலைப் புலிகள் தேவைப்படுகிறார்கள்.

கனவில் கூட விடுதலைப் புலிகள் வர வேண்டும் என்றும் கருதுகின்றவர்களே இன்றைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் முன்வைக்கின்ற ஆதங்கங்களை பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கும் என்பது சந்தேகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to புலிகள் பெயரை உச்சரிக்காமல் அரசாங்கத்தின் அமைச்சர்களினால் அரசியல் நடத்த முடியாது – அரியநேத்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com