Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று,. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்ட பாஜக தொண்டர்கள் சார்பில்,தமிழக பாஜக கட்சி நிர்வாகிகள் கூட்டம் செங்கல்பட்டில் நடைப்பெற்றது. தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழிசை கலந்துக்கொண்டு, கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஒரு கோடி உறுப்பினர்களை இரண்டு மாதங்களுக்குள் சேர்க்க வேண்டும் என்பது குறிக்கோள் என்றும் கூறியுள்ளார். அதோடு தமிழக அரசு தற்போது செயலிழந்து உள்ளது மட்டுமின்றி, தமிழகத்தில் தீவிரவாதிகளும் ஊடுருவி உள்ளனர் என்றும், முன்பு எந்த ஆட்சிக் காலத்திலும் தமிழகத்தில் இது போன்ற தீவிரவாதிகள் ஊடுருவியது இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் மீனவர்களை இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com