Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்புத் துறைமுகமும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சீனாவின் தலைநகரமாக இலங்கை மாறி வருவதாகவும், இதனால் இந்தியாவுடனான இலங்கையின் இராஜதந்திர நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் துறைமுகங்கள் அனைத்தையும் அரசாங்கம் சீனாவுக்கு வழங்கி விட்டது. கொழும்பு துறைமுகம் சவுத்போர்ட் திட்டத்தின் கீழ் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று இத்துறைமுகத்திற்கு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் வந்து போகிறது. இதனால், இந்தியா எமது நாட்டை சந்தேகமாக நோக்குவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.

அன்று ரணிலின் ஆட்சியில் இந்தியாவுடன் நெருங்கி இங்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வோம். இரு நாட்டு துறைமுகங்களூடாக வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஆனால், இன்று இலங்கை சீனாவின் தலைநகரமாக மாறி வருகின்றது. கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் துறைமுகங்கள் அனைத்தும் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to கொழும்புத் துறைமுகமும் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது: ரவி கருணாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com