ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்வதற்கு எதிரணியிலுள்ள கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிகிறது.
நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்ற நீதிக்கான தேசிய அமைப்புக்கு தலைமை தாங்கும் மாதுளுவாவே சோபித தேரரின் முன்னெடுப்பில் நேற்று வெள்ளிக்கிழமையும் எதிர்க்கட்சிகளிடையே சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதும் பொது வேட்பாளர் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொது வேலைத் திட்டத்தின் கீழ் இயங்கவுள்ள அரசியல்கட்சிகளின் கூட்டு ஊடக சந்திப்பு நாளை மறுதினம் திங்களன்று நடைபெறவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, முன்னாள் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் சோபித தேரர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் வேறொரு தலைவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கும் நிலை உள்ளதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பி.பி.சி.யிடம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் சோபித தேரருடன் பொது வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே பொது வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த இறுதி அறிவிப்பை அக்கட்சியே அறிவிக்கும் என்று தெரிவித்த அசாத் சாலி, ஆயினும், கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக அறிவிப்பதற்கான பரிந்துரையை தாம் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to ரணிலுக்கு பதிலாக கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக எதிரணி ஏற்கலாம்!