இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் அப்பாவிகள் அவர்களுக்கு பொது மன்னிப்பு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நீதிமன்றத்தில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்குத் தண்டனை கடந்த 30ம் திகதி விதிக்கப்பட்டது.இவர்களது படகில் போதைப் பொருள் இருந்ததாக குற்றச்சாட்டு. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர்களுக்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும்,ஆனால், இதற்கு மத்திய அரசு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் கூறியதாகவும் இலங்கை அமைச்சர் பிரபா கணேசன் கூறியிருந்தார்.
ஆனால்,தமிழக மீனவர்கள் 5 பேரும் அப்பாவிகள் என்றும், இவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலையைத்தான் மத்திய அரசு எதிர்ப்பார்க்கிறது என்றும் கூறியுள்ளது. அப்படி இல்லை எனில் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை எதிர்கொள்ளத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று, இந்திய அரசின் சார்பில் கூறப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to தமிழக மீனவர்களின் பொது மன்னிப்பு என்பது ஏற்க முடியாது: மத்திய அரசு