Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் நியமனம் தொடர்பில் எதிரணியுடன் எந்தவித கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியுடன் இணைவது பற்றியும் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதற்கு தலைமை வகிக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிவற்றுடன் மாத்திரமே நாங்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். அதில், முன்னேற்றகரமான நிலை காணப்படுகின்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொது வேட்பாளர் தொடர்பில் எதிரணியுடன் பேசவில்லை: ஜாதிக ஹெல உறுமய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com