Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நவம்பர் 2013 ல்  மொரிசியஸ் நாட்டில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்புடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம் ஒன்று சேர்ந்து நடாத்திய 'உலகத் தமிழர் ஒருமைப்பாடு' மாநாட்டுக்கு  பின், அந்த மாநாட்டுக்கு சிறப்பு பேச்சாளாராக கலந்துகொண்ட பேராசிரியர் ராமசாமி மற்றும் மலேசியா நாட்டில் இருந்து வந்திருந்த தமிழ் உணர்வாளர்கள் தொடர்ச்சியாக அடுத்த மாநாட்டை தமது நாட்டில் முன்னெடுத்து செல்வோம் என்ற வாக்குறுதிக்கு அமைய  பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாடு 2014 'அடையாளத்தை தேடி' என்ற கருப்பொருளுடன், பேராசிரியர் ராமசாமி தலைமையில் - பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கம் - புதிய வரலாறு படைக்க அடையாளத்தை தேடியதோடு மட்டுமல்லாமல் - தமிழர்கள் எங்கு இருக்கின்றானோ 'அங்கே தன்மானமும் வாழும்' என்பதை வலியுறுத்தி காட்டினர்.

மலேசியா, மியன்மார், இந்தோனேசியா. இந்தியா, இலங்கை, மௌரிசியஸ், ரீயுனியன், தென் ஆபிரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா  போன்ற நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் 300க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.

தமிழ் தேசியத்தை வென்றெடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் - மனித குலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், உலக எல்லைகளை தாண்டி, மதசார்பற்ற முற்போக்கான உலக தமிழ் சமூகத்தை உருவாக்க வேண்டும், தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்ற சிந்தனை மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரின் பேச்சுக்களிலும் கருப்பொருளாக அடங்கி இருந்தது.

இந்த மாநாட்டில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், தமிழகத்தில் இருந்து வை. கோபாலசாமி, திரு வேல்முருகன், திரு கௌதமன், இந்தோனேசியாவை சேர்ந்த மோசேஸ் அழகேசன், மியன்மார் - ஜப்பானை சேர்ந்த வீரமணி, டெல்லியில் இருந்து முனைவர் மகாலிங்கம், தமிழீழத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த  சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தி சசிதரன், தென் ஆபிரிக்காவில் இருந்து பிரகாசன் படையாச்சி, டீஸ் பிள்ளை, ரீயுனியன் தீவில் இருந்து ச்டீப்ஹன் சவுரியம்மா, மௌரிசியஸ் நாட்டில் இருந்து மேனன் சௌண்டரெசன் ஆகியவர்களுடன் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமிழர்கள் விடுதலையின் அவசியத்தை வலியுறித்தினர்.

மாநாட்டின் இறுதி நாளில் கலந்துகொண்ட   மலேசியாவின் முன்னாள் துணை பிரதமரும், இந்நாள் எதிர்க்கட்சி தலைவரும் ஆகிய அன்வர் இபரஹிம் - தமிழீழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் உலகத்தை உலுக்கிய சம்பவங்கள் வெளிச்சமாகியுள்ள நிலையில் மனிதகுலத்தின் உரிமைகள்  காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்று திருக்குறளை மேற்கோள்காட்டியதுடன், தமிழீழத்தில்  ஒரு பெண்ணுக்கு  நிகழ்ந்த கொடுமையை எடுத்துரைத்து, தியாக வரலாறுகள், தமிழீழ மக்களைத் தற்காத்த விடுதலைப் போராளிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேராளர்களின்  இதயத்தை விம்ப வைத்தார்.

மௌரிசியஸ் மாநாட்டின் தொடர்ச்சியாக பினாங்கு மாநாட்டின் நிறைவில்   உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கவும், ஈழத் தமிழர்களை பாதுகாக்கவும், தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாக்கவும், மலேசியா தமிழர்களை பாதுகாக்கவும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களின் பாதுகாப்பாக நாம் இயங்குவோம் என்று உறுதியெடுத்துக்கொண்டனர்.

0 Responses to தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக மலர வேண்டும்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com