இலங்கையில் சமாதான முயற்சிகளில் ஏற்பாட்டாளராக செயற்பட்ட நோர்வே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுவான அடிப்படைகளிலோ அல்லது அவர்களின் இராணுவத் தேவைகளுக்காகவோ எந்தவித நிதியுதவியையும் வழங்கவில்லை என்று சமாதானத் தூதுவரும், நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் முன்னாள் அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளித்து அறிக்கையொன்றை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம், அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியிருக்கின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதற்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்று நான் ஊகங்களை வெளிப்படுத்தப்போவதில்லை.
நடக்கவிருக்கின்ற தேர்தலில் எனது பெயர் எந்தவித்திலும் இழுக்கப்படுவதை அனுமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லாத காரணத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளடங்கலாக எல்லோரும் அறிந்திருக்கின்ற வெளிப்படையான தகவல்களை மீண்டும் வெளிப்படுத்துகின்றேன்.
இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு ஏற்பாட்டாளராக, மூன்றாவது தரப்பாக பங்கெடுத்திருந்திருந்த நோர்வே அரசாங்கம், ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுவான அடிப்படைகளிலோ அல்லது அவர்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கு குறிப்பாகவோ நிதி வழங்கவில்லை.
அப்போது நடந்துவந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக ஈடுபடுத்துவதற்கு உதவும் முகமாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு பொருளாதார ரீதியான வளங்களை நோர்வே ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் அடிப்படையிலேயே புலிகளுக்கு வானொலி ஒலிபரப்புக் கருவி (radio transmitter) ஒன்று வழங்கப்பட்டது.
இப்படியான உதவிகள், வெவ்வேறு தலைவர்களின் கீழிருந்த இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையாகத் தெரிந்தே இருந்தது. அதில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்த காலமும் அடங்கும். இலங்கையில் தாங்கள் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் முழுமையாக வெளிப்படையாகவே நடந்துகொண்டோம்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவதற்கு முன்னமே பல தடவைகள் அவரை நான் சந்தித்திருக்கிறேன். சமாதானச் செயற்பாடுகளின் முழுவிபரங்களையும் அவருக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். எங்களின் சமாதான நோக்கங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சராக இருந்தபோதும் பிரதமராக இருந்தபோதும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார். அத்தோடு, அவர் நோர்வேயை ஊக்குவித்ததுடன் தொடர்ந்தும் தனக்கு முன்னேற்றங்கள் குறித்து தெரியப்படுத்துமாறு கோரியிருந்தார். அக்காலத்தில் அளிக்கப்பட்ட அந்த பலனுள்ள ஒத்துழைப்புகளுக்காக நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமாதான முயற்சிகளின் ஏற்பாட்டாளராக நோர்வே தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்தார். என்னை இலங்கைக்கு வருமாறு தனிப்பட்ட அழைப்பை விடுத்திருந்தார். அதன்பின்னர், பல தடவைகள், தன்சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அரசியல் ரீதியான செய்திகளை கொண்டுசேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த செய்திகளை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துக்காக கொண்டுசேர்த்தேன். குறிப்பிட்டதொரு காலப் பகுதிக்கு உயிர்ப்பலிகள் நிறுத்தப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ எனக்கு தனிப்பட்ட ரீதியிலும், நோர்வே அரசாங்கத்துக்கும் நன்றியை வெளிபடுத்தியிருந்தார்.
2010ஆம் ஆண்டில் கடைசியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்த சந்தர்ப்பத்தில், நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு அங்கீகாரமாக, என்னை மீண்டும் இலங்கை வந்து, அங்குள்ள சமாதானத்தை நேரடியாக உணரும்படி கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் நேர்வேயின் சமாதான முயற்சி பங்களிப்புகளை விபரித்து அடுத்த ஆண்டு நூல் ஒன்று வெளியிடப்படும்போது, இந்தத் தகவல்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும். பிரித்தானிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான மார்க் சால்டர், என்னுடனும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்கெடுத்திருந்த நோர்வேயின் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சராக இருந்த விதார் ஹெல்கிஸ் ஆகியோருடன் அந்த நூலை எழுதுகின்றேன்.
இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆரம்பித்துள்ள விசாரணைக்கு, இலங்கை அரசாங்கத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் புரியப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை, இலங்கையராக இருந்தாலும் சரி வெளிநாட்டவர்களாக இருந்தாலும் சரி, தங்களிடமிருக்கின்ற சரியான தகவல்களை, முழுமையான நேர்மையுடன் சமர்ப்பிக்கவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளராலும் ஏனைய ஐக்கிய நாடுகள் நிறுவனங்களாலும் எடுக்கப்படும் முக்கியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே, முன்னணி உலகளாவிய அமைப்பாக ஐக்கிய நாடுகளினால் செயற்படமுடியும்” என்றுள்ளார்.

0 Responses to புலிகளின் இராணுவத் தேவைகளுக்காக நிதியுதவி வழங்கவில்லை: எரிக் சொல்ஹெய்ம்