Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கேரள பத்திரிகையாளர்கள் நுழைந்தனர்.  பெரியாறு அணையை பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோள் பார்வையிட சென்ற போது, அவருடன் கேரள பத்திரிகையாளர்கள் வந்தனர்.

பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைவதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்ட போதும், அதனை மீறி அவர்கள் உள்ளே சென்றனர். அவர்களை கேரள போலீசார் தடுக்கவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது.

கேரள பத்திரிகையாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தது தொடர்பாக, மேற்பார்வை குழுவிடம் புகார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெரியாறு அணையில், பீர்மேடு எம்.எல்.ஏ., பிஜூமோளுடன் வந்த சிலர், தமிழக பொறியாளர் மாதவன் என்பவரை கீழே தள்ளி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அணையில் பாதுகாப்புபணியில் உள்ள கேரள போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

 பேபி டேம் அணை பகுதியை கேரள பத்திரிகையாளர்கள் அத்துமீறி புகைப்படம் எடுத்துள்ள தாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தால் முல்லைப்பெரியாறு பாசண விவசாயிகள் ஆவேசம் அடைந்துள்ளனர்.     கேரளாவின் அத்துமீறலைக்கண்டித்து தேனி மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதிக்கவும் தயாராகிவருகின்றனர்.  இதனால் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

0 Responses to கேரள பெண் எம்.எல்.ஏ. அத்துமீறல்- தமிழக அதிகாரி மீது தாக்குதல் : முல்லைப்பெரியாறில் பதட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com