Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பது தொடர்பில் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சிறலங்காவின் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு   இதனைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்துள்ள நிலையில், அரசியல் அமைப்பில் திருத்தம் செய்துள்ள போதும், அவரால் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே ,இதற்கான விளக்கத்தை அவர் உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மகிந்தராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்றே உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தராஜபக்ஷவின் நண்பரான மொஹான் சமரநாயக்கவே தற்போது பிரதம நீதியரசராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com