யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சகலதையும் இழந்து வாழ்வாதாரத்திற்கு போராடுகின்ற நிலையில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்ற மக்களின் வாழ்க்கையைய மேம்படுத்துவது அவசியமென்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரவித்துள்ளார்.
குறிப்பாக பொண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ள குடும்பங்களின் நிலை மிக மோசமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அனந்தி சசிதரன் அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் மக்களின் பாதிப்புக்கள் ஏராளம். அதிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. அந்த மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்கின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். ஆனால் அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வதற்கு தயாராகவும் இல்லை.
சகலதையும் இழந்து தமது வாழ்வாதாரத்திற்கே போராடுகன்ற நிலையிலையே மக்கள் இருக்கின்றனர். ஆகவே இதனை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்வைக் கட்டியெழுப்புவது அனைத்துத் தரப்பினர்களினதும் பொறுப்பாகவும் இருக்கின்றது.
குறிப்பாக தற்போது யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம். இதில் பெரும் பிரச்சனையாக அவர்களது வாழ்வாதாரப் பிரச்சனையே இருக்கின்றது. இதனாலேயே பல்வேறு பாதிப்புக்களையும்; பிரச்சனைகளையும் எதிர்நோக்குகின்றனர்.
இதனை மக்கள் நேரடியாகவே முறையிட்டிருக்கின்றனர். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையிலும் தெரிவித்திருக்கின்றேன். முhகாண சiபின் ஊடகாவும் ஏனைய வழிகள் ஊடாகவும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிற்கு உதவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
அதாவது இங்கு பாதிக்கப்பட்ட மக்களே வாழ்ந்து வருகின்றனர்.வர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு புலம் பெயர் உறவுகள் தயாராகவே இருக்கின்றனர். இதற்கமைய பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதற்கு அப்பால் தற்போது பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிற்கே உதவிகளைப் பெற்றுக் கொடக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் அவர்களின் துனபங்களும் வேதனைகளும் ஏராளம். நாளுக்கு நாள் அவர்களின் துன்ப வேதiனைகள் அதிகரித்தே வருகின்றது. இதனால் அவர்கள தம் குடும்பத்திலும் வாழ்விலும் பாரிய சவால்;களையும் பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கமையவே முதற்கட்மாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேமபடுத்தும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இதற்கு உதவிகள் வழங்குவதற்கு புலம் பெயர் அமைப்புக்களும் உறவுகளும் தயாராக உள்ளதுடன் சில உதவிகளையும் வழங்கி வைத்திருக்கின்றனர். அதே போன்று தொடர்ந்தும் வழங்குவார்கள். இதனை தேவைகளின் அடிப்பiயில் மக்களுக்கு உரிய முறையில் வழங்குவதற்காகவே கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றோம்.
இதற்கமையவே உதவிகள் வழங்க நடவடி;ககை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதே போன்று உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய அதே வேளையில் இதனுடாகவே வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியுமென்றும் அனந்தி சசிதரன் தெரிவத்துள்ளார்.
0 Responses to பெண்களைத் தலைமைத்துவ குடும்பங்களிற்கு உதவி! மாகாண சபை உறுப்பினர் அனந்தி நடவடிக்கை