Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகாரம்!

பதிந்தவர்: ஈழப்பிரியா 18 November 2014

சுன்னாகம் மின்சார நிலையக்கழிவு எண்ணெய் அந்தப்பிரதேச கிணற்று நீருடன் கலப்பதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைக் கூடிய நிலையில் இதனை ஏன் தடை செய்யக்கூடாதென்று சர்ச்சைக்குரிய மின் உற்பத்தி நிலையங்களான நொர்தேன் பவர் மற்றும் உதுறு ஜெனி ஆகிய இரண்டு தரப்புக்களிடமும் மல்லாகம் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணெய் கிணற்று நீருடன் கலப்பதால் நீர் மாசடைவதுடன் தாம் தற்போது பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனை ஏற்படும் என்றும் ஆகவே இதனைத் தடை செய்ய வேண்டுமென்றும் கடந்த வாரம் அப்பகுதி மக்கள் மல்லாகம் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யதிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மல்லாகம் நீதவான் எஸ் சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைகளுக்கு நேற்று திங்கட்கிழமை காலை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மின்சார சபையின் நொர்தேன் மற்றும் உந்துறு அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள் ஆஐராகியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதவான் பொது மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் விளங்ககங்களைக் கேட்டுக் கொண்டதுடன் இதனால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகவே இதனை ஏன் நிறுத்தக் கூடாதென்றும் அங்கு பிரசன்னமாகியிருந்த நொர்தேன் மன்றும் உந்துறு ஆகிய இரண்டு மின்சார நிறுவனங்களிடமும் கேட்டிருந்தார்.

அத்தோடு இதற்குரிய விளக்கத்தையும்; நீதி மன்றுக்கு அளிக்குமாறும் உத்தரவிட்டு எதிர் வரும் 27 ஆம் திகதி வரை வழக்கை ஒத்தி வைத்தார்.

நொர்தேன் பவர் மற்றும் உந்துறு ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் சுற்றுச்சூழல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமைய கழிவு ஒயிலை நிலத்திற்கு கீழே விடாது நிலத்திற்கு மேலே தாங்;கி அமைத்து செயற்பட வேண்டுமென மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ். சதிஸ்கரன் பணித்துள்ளார். அத்துடன் மேற்படி இரண்டு நிறுவனங்களுக்கும் அதனை அமுல்படுத்த உத்தரவிட்டு வழக்;கை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.

அத்தோடு மேற்படி நொர்தேன் பவர் மற்றும்; உந்துறு நிறுவனங்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுற்றுச் சுழல் அதிகாரிகள் ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச சபை குடி நீர் வழங்க வேண்டுமென்றும் அவர் பணித்துள்ளார்.

0 Responses to சுன்னாகம் கழிவு எண்ணெய் விவகாரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com