Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திரு­டர்­களின் தொல்­லை­களில் இருந்து பெண்­க­ளையும் உடை­மை­க­ளையும் பாது­காக்கும் நோக்­குடன் முன்­னெச்­சரிக்­கை­யாக திருட்­டுக்கள் இடம்­பெறும் இடத்தைக் குறிப்­பிட்டு யாழ்ப்பா­ணத்தில் திரு­டர்கள் கவனம் என்ற சுலோக அட்­டைகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன.

இந்த அறி­விப்பைத் தொடர்ந்து மேற்­ படி வீதியால் செல்லும் பெண்கள் மிக அவ­தா­னத்­துடன் பயணம் செய்­ய ­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

மானிப்பாய் மத்­திய சந்­தைக்கு முன்­பாகச் செல்லும் முத்­துத்­தம்பி வீதியில் குறிப்­பிட்ட இடத்தில் சுலோக அட்­டைகள் தொங்­க­வி­ட ப்­பட்­டுள்­ளன.

மேற்­படி வீதியில் தொலைத்­தொ­டர்புக் கோபுரம் அமைந்­துள்ள காணிப் பகு­தி­யி­லுள்ள இரு­பக்க வேலி­களும் சுமார் பத்து மீற்றர் நீளம் வரை புதர்கள் வளர்ந்து மறை­விடம் போல் காட்­சி­ய­ளிப்­ப­தனால் இப்பகு­தியில் ஏற்­க­னவே திருட்டுச் சம்­ப­வங்கள் அதி­க­மாக இடம்­பெற்­றுள்­ளன.

இதை­ய­டுத்து, ''கவனம் தாலிக்­கொடி, சங்கிலி அறுக்குமிடம்'' என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகள் தொங்க விடப்பட்டுள்ளன.


0 Responses to கவனம்! தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்! யாழில் இப்படியும் சுலோக அட்டைகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com