வடக்கில் காணப்படும் உற்பத்தி சார் வளங்களை அடையாளம் கண்டு அதிலிருந்து உருவாக்கக் கூடிய தொழிற்துறை தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழுகின்ற துறைசார் அறிவும், ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள் உதவ வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த 30 வருடகால யுத்தம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட புறக்கணிப்புக்கள், பாகுபாடுகள் காரணமாக தமது வாழ்வாதாரங்களை இழந்தும், தொலைத்துவிட்டும் நிரந்தர தொழில் வருமானம் எதுவுமின்றியும் அல்லற்படும் எமது மக்களின் வாழ்வியலையும் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துவது மிக மிக அவசியமாகின்றது.
இதன் பொருட்டு, எமது தாயகத்தில் இருக்கக்கூடிய உற்பத்தி சார் வளங்களை இனங்கண்டு அவற்றைக்கொண்டு உருவாக்கக்கூடிய தொழில்களையும் இனங்கண்டு திட்டங்களை தயாரித்து எமக்கு வழங்கி உதவ வேண்டுமென உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழுகின்ற துறைசார் அறிவும், ஆற்றலும் அனுபவமும் மற்றும் நிபுணத்துவமும் கொண்ட உறவுகளை வடக்கு மாகாண சபை வேண்டி நிற்கின்றது.
அத்துடன், இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் அயல்பணி சேவைகளில் எமது இளைஞர்கள் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் பற்றிய ஆலோசனைகளும் வரவேற்கத்தக்கது.
வடக்கு மாகாண சபை தனித்து நின்று திட்டங்களை தயாரிக்கலாம் என்றோ அல்லது அமுல்படுத்தலாம் என்றோ கருதவில்லை. மாறாக எமது உறவுகளின் உதவிகளுடனும் ஒத்துழைப்புக்களுடனுமே எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றலாம் என திடமாக நம்புகின்றது.
இந்த முயற்சியில் எம்முடன் இணைந்து கொள்ள யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எமது பேரவை செயலகத்துடன் தபால் மூலமாகவோ councilnpc@gmail.com என்ற மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்” என்றுள்ளது.

0 Responses to தொழிற்துறை மேம்பாட்டுக்கு உதவுமாறு வடக்கு மாகாண சபை கோரிக்கை!